← Back to list
நெகிரி செம்பிலானில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு!
Nov 05, 2020
நெகிரி செம்பிலான் சிரம்பானில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தை அடுத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்கள் தற்காலிக தண்ணீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக Sungai Linggi நீர் சுத்திகரிப்பு ஆலையில் இடையூறு ஏற்பட்டிருப்பதாக மாநில நீர் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரம்பான் தவிர்த்து போர்ட்டிக்சனிலுள்ள சில பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றம்!
நிபந்தனைக்குட்பட்ட மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில், ஊழியர் சேமநிதி வாரியம் EPF-பின் கிளை அலுவலகங்களின் செயல்பாட்டு நேரம், காலை 9 மணியில் இருந்து பகல் 2 மணி வரை குறைக்கப்படுகிறது.
இந்த நேர மாற்றம் அடுத்த வாரம் திங்கட்கிழமை நடப்புக்கு வருகிறது.
பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள்!
COVID-19 போராட்டத்திற்கு மத்தியில் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை குறித்து மலேசியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஏதுவாக, அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிலடங்கும்.
இது தவிர்த்து, தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்பார்ப்பு குறித்து விவரிக்கின்றார், மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழரசு சுப்ரமணியம்.
"தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டிட வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்; இட மாற்றம் செய்யப்படுகின்ற பள்ளிகளுக்கு போதுமான அளவில் பொருளுதவிகள் வழங்கப்பட வேண்டும். இந்த கொரோனாப் பரவல் காலக்கட்டத்தில் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்ள இணைய வசதிகள் இல்லாதவர்களின் நலன் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இயங்கலை வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்கள் வசதி செய்து கொடுப்பதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்"
இப்பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார துறைகளில் ஒன்றாக தமிழ் திரைப்படத் துறை திகழ்கின்றது.
இதனை கருத்தில் கொண்டு, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் அரசாங்கம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என, நாட்டின் முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், கலைஞருமான டெனிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
"இந்த தீபாவளி காலக்கட்டத்தில் நிறைய திரைப்படங்கள் வெளியிடப்படாத சூழ்நிலையில் இருக்கின்றன; இதனை கருத்தில் கொண்டு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான சிறப்பு உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு; காரணம், தயாரிப்பாளரையும் தாண்டி அவர்களுடன் கலைஞர்கள் உட்பட திரைத் துறை சம்பந்தப்பட்ட நிறைய பேரின் வாழ்வாதாரம் அதில் அடங்கியுள்ளது; மேலும், உள்நாட்டுப் படங்களை வெளிநாடுகளுக்குச் கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளும் - பயிற்சிகளும் இன்னும் ஆக்ககரப்படுத்தப்பட வேண்டும். தற்போது நிறைய மாணவர்கள் இக்கலைத் துறை சம்பந்தப்பட்ட மேற்கல்விகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கும் இத்திட்டங்கள் உறுதுணையாக அமையும் என்பது என நம்பிக்கை"
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather