← Back to list
2021 பட்ஜெட் : 6,600க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!
Nov 03, 2020
2021 வரவு செலவு அறிக்கை குறித்து தங்களுக்கு ஆறாயிரத்து 600க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைத்திருப்பதாக நிதியமைச்சு கூறியிருக்கிறது.
அரசியல் கட்சிகளை உட்படுத்திய கலந்துரையாடல்கள், பட்ஜெட் மீதான இணைய அகப்பக்கம் ஆகியவை வழி அவை பெறப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை Covid-19 தாக்கத்தை எதிர்கொள்வதற்கான உதவிகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பானவை என அது தெரிவித்தது.
2021 வரவு செலவு அறிக்கையை virtual அதாவது மெய்நிகர் வாயிலாகத் தாக்கல் செய்ய முடியாது.
நாடாளுமன்ற விதிமுறைகளில் அதற்கு இடமில்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
மெய்நிகர் வழி 2021 பட்ஜெட்டைச் சமர்ப்பிப்பது Covid-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்கு நேரடியாக வர வேண்டியது அவசியமாவதாக அவர் மேலும் விளக்கினார்.
“Semua peraturan tu menjurus kepada Tindakan Tindakan dalam parlimen, jika nak membahas kena berdiri...jadi semuanya dari segi spirit dan dari segi Tindakan Tindakan yang dilakukan, di persidangan mesti dilakukan berdasarkan apay nag berlaku di Parlimen”
2021 பட்ஜெட் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டம் நீண்ட நாட்களுக்கு நடத்தப்படுவது Covid-19 பரவல் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாகலாம் என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
எனவே நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் SOPயைத் தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் என Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தினார்.
நேற்று மக்களவைக் கூட்டத்திற்கு முன் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மேலவை ஊழியர் ஒருவர் உட்பட எழுவருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து மக்களவைக் கூட்ட நேரம் குறைக்கப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், இன்று முதல் வியாழக்கிழமை வரை கூட்டத்தை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை மட்டுமே நடத்த மக்களவையில் இன்று இணக்கம் காணப்பட்டது.
விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin உத்தரவிட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான், பேரா, மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் Covid-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு சொன்னார்.
நேற்று நாட்டில் புதிதாக 834 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
சிலாங்கூர் மாநிலத்தில் ஏழு துணை மாவட்டங்கள் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் சிவப்பு மண்டலப் பகுதிகளாக இருக்கின்றன.
கிள்ளான், Petaling, Kajang, Labu, Damansara, Sungai Buloh, Tanjung 12 ஆகியவையே அத்துணை மாவட்டங்களாகும்.
அண்மையில் வேலையிழந்த விமானப் பணியாளர்களுக்கு பல்வேறு முயற்சிகள் வழி உதவத் தயாராக இருப்பதாக SOCSO தெரிவித்திருக்கிறது.
அதோடு வேலை காப்புறுதித் திட்டத்தின் மூலம் பணியை இழந்தவர்களுக்கு குறிப்பிட்ட தவணைக்கு மாற்று வருமானமும் வேலை தேடுவதற்கான அலவன்சும் கொடுக்கப்படுவதாக அது கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather