Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

EPF: முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்காதீர்!

Oct 31, 2020


இந்த COVID-19  பெருந்தொற்று காலக்கட்டத்தில், ஊழியர் சேமநிதி வாரியம் EPF-பின்  முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க வேண்டாம் என அதன் சந்தாதாரர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

அதற்குப் பதிலாக, நிதி நிர்வாகம் குறித்து ஆலோசனைகளைப் பெற தங்களது அதிகாரிகளை சந்தாதாரர்கள் தொடர்புக் கொள்ளலாம் என EPF  கூறியுள்ளது.

இதன் வழி, இந்த இக்கட்டான காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து விதமான உதவிகள் குறித்தும் சந்தாதாரர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என EPF தெரிவித்தது. 

கொரோனாத் தொற்றுக் காரணமாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், EPF முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க மக்களை அனுமதிப்பது சற்று சிரமமான ஒன்று என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறியிருந்தார்.

பணத்தை மீட்க அனுமதி அளிக்கப்பட்டால், அது எதிர்காலத்தில் சந்தாதாரர்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளை கொண்டு வரலாம் என்றாரவர்.

இவ்வேளையில்,  வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவு செலவு அறிக்கை வழி கொரோனாத் தொற்றில் இருந்து நாட்டை காப்பற்றவும்,  அதன் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவும், அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஜொகூர் பாருவில் கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன!

COVID-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜொகூர் பாருவில், நாளை தொடங்கி 14 நாட்களுக்கு, 376 கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன.

அனைத்து அரசு ஆரம்ப - இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள், மற்றும் கல்வி அமைச்சில் பதிவுப் பெற்ற அனைத்து தனியார் பள்ளிகளையும்  அந்நடவடிக்கை உட்படுத்தியிருக்கின்றது.

அக்கல்வி நிலையங்கள் குறித்த விவரங்களை, கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் காணலாம். 

ஆய்வுக்கு முன்வாருங்கள்!

உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆய்வில் கலந்துக் கொள்ள முன்வருமாறு, COVID-19-தில் இருந்து மீண்டவர்களை சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய 270 பேர் அந்த ஆய்வுக்கு தேவைப்படும் நிலையில், இப்போதைக்கு 106 பேர் அந்த ஆய்வுக்கு பதிந்துக் கொண்டிருப்பதாக அமைச்சு கூறியது.

நாட்டில் ஆகக் கடைசியாக 799 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அவை அனைத்தும் உள்நாட்டில் பரவியவை என சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

ஆக அதிகமாக 466 சம்பவங்கள் சபாவில் பதிவாகியுள்ளன

மூவர் அத்தொற்றுக்குப் பலியான வேளை, பத்தாயிரத்து 392 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சபா, சிலாங்கூர், லபுவான், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரை உட்படுத்தி புதிய cluster-கள் உருவாகியுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather