Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அனைத்துலக அரங்கில் ஜொலிக்கும் ஆசிரியர்!

Oct 30, 2020


கற்றுக் கொடுக்கும் கல்வி மாணவர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் தாம் காட்டிய அக்கறை தான் தனது இன்றைய அடைவு நிலைக்கு காரணம் என்கிறார், பகாங்கைச் சேர்ந்த ஆசிரியர் Samuel Isaiah.

2020 அனைத்துலக ஆசிரிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பேரில் ஒருவரான Cikgu Sam, ஆசிரியராக தனது வளர்ச்சிக்கான இதர காரணங்களை இவ்வாறு விவரிக்கின்றார்.

"மாணவர்களின் கருத்துகளை கேட்கும் பழக்கம் எனக்குண்டு; அது தவிர, ஏதாவது பிரச்னைகள் என்றால், தள்ளிப் போகாமல், உடனடியாக அதற்கு தீர்வுக் காண்பது தான் எனது பழக்கம்; அவ்வாறு பிரச்னைகள் தீர்க்கப்படும் போது அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள முடிகின்றது; ஆக இது அறிவு மட்டும் சார்ந்தது அல்ல; உணர்வுப்பூர்வமானதும் கூட" 

ஆசிரியர் பணியைப் பொறுத்த வரை, தனது மாணவர்கள் தான் தனது உற்சாகம் – உத்வேகம் என Samuel தெரிவித்தார்.

140க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களுக்கு மத்தியில், இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் Samuel, பூர்வக்குடி மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

அவரது பள்ளியில் 2012ஆம் ஆண்டு 30 விழுக்காடாக இருந்த ஆங்கில மொழிப் பாட தேர்ச்சி விகிதம், 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 80 முதல் 85 விழுக்காடு வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதுக்கான வெற்றியாளர் டிசம்பர் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாங்கூர் மாநில பட்ஜெட்!

சிலாங்கூர் மாநிலத்திற்கான 2021 பட்ஜெட் இன்று பகல் மூன்று மணிக்கு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

COVID-19 SOP-களை பின்பற்றி அத்தாக்கல் நடைபெறவுள்ளது.

இம்முறை அம்மாநில வரவு செலவு அறிக்கையில், விவசாயம், சுற்றுலா, பொது சுகாதாரம் உள்ளிட்ட 5 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.



இணையச் சேவை அத்தியாவசியப் பொருளாக வேண்டும்!

தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை அடுத்து நாட்டின் மிக முக்கிய மூன்றாவது அத்தியாவசியப் பொருளாக, இணைய தொடர்புக்கான தேவை 2021 பட்ஜெட்டில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு எதிர்பார்க்கின்றது.

இணையச் சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த அது அவசியமாவதாக அமைச்சு கூறியது.

2021 பட்ஜெட்: முகிதீன் எதிர்கட்சியினருடன் விவாதிக்க வேண்டும்!

மற்றொரு நிலவரத்தில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அதன் உள்ளடக்கத்தை பிரதமர் தங்களிடம் விவாதிப்பார் என Pakatan Harapan எதிர்பார்க்கின்றது.

PH நடத்திய சந்திப்புக்கு பிறகு Datuk Seri Anwar Ibrahim பட்ஜெட் மீதான தங்களது அந்த நிலைப்பாடு குறித்து அறிவித்தார்.

2021 பட்ஜெட் நிறைவேற்றப்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Covid-19 தணிந்ததும் பொதுத் தேர்தல் நடத்தலாம்! - Ahmad Zahid

UMNO-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடருவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாட்டு நலனை முன்னிறுத்தி அரசியல் சண்டை சச்சரவுகளை நிறுத்துமாறு மாமன்னர் வலியுறுத்தியிருப்பதற்கு ஏற்ப, Perikatan Nasional மத்திய அரசுக்கான தங்களின் ஆதரவு தொடரும் என்பதை அது மறு உறுதிபடுத்தியது.

என்றாலும் COVID-19 சீற்றம் முழுமையாக தணிந்தப் பிறகு அல்லது குறைந்தப்பட்சம் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ பரிந்துரைத்துள்ளது.


 

அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டனர்!

ஏறக்குறைய ஒரு மாத்திற்கு பிறகு, நாட்டில் முதன் முறையாக, தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களை காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ஆகக் கடைசியாக, 649 பேருக்கு அத்தொற்று உறுதியான வேளை, 685 பேர் அப்பெருந்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அக்டோபர் ஏழாம் தேதிக்குப் பிறகு,  முதன் முறையாக மரணமும் பதிவாகவில்லை.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather