Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தீபாவளியை முன்னிட்டு சில கோரிக்கைகள்!

Oct 28, 2020


சிறு மற்று நடுத்தர வியாபாரிகளுக்கு இது மிகவும் சவால்மிக்க ஆண்டாகவே இருந்து வருகின்றது!

குறிப்பாக தீபாவளி நெருங்கியுள்ள இக்காலக்கட்டத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதால், இந்திய வணிகர்களின் நலன் கருதி, அரசாங்கம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் MAICCI கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பான கோரிக்கைகள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் மற்றும் DBKL-லிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக MAICCI பொதுச் செயலாளர் Datuk Dr AT Kumararajah  தெரிவித்தார்.

இந்திய வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதிகளான, Brickfields Little India, Masjid Jamek, Lebuh Ampang, Sentul ஆகிய இடங்களில்  நிரந்தர கடைகள் கொண்டவர்கள், அக்கடைகளுக்கு வெளியே கூடுதல் கூடாரம் அமைத்து, அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOPக்கு ஏற்ப தங்களது வியாபாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதில் ஒன்று என்றாரவர்.

இந்நிலையில், MAICCI-கியின் மற்றொரு கோரிக்கை குறித்தும் Datuk Kumararajah விவரித்தார்.

"மற்றொன்று, வியாபாரிகள் தங்களது வளாகங்களை நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டி செய்யப்பட்டுள்ள கோரிக்கையாகும்; தீபாவளிக்கு முன்னதாக மூன்றில் இருந்து 5 நாட்கள் வியாபாரிகளுக்கு இந்த சலுகையை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம்" 

இக்கோரிக்கைகள் தொடர்பான முடிவுகளை இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான தீபாவளி குறித்த SOP-கள் இவ்வார கடைசியில் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakoob நேற்று அறிவித்திருந்தார்.


 

தேர்தலா? இப்போதைக்கு வேண்டாம் என்கிறது சுகாதார அமைச்சு!

COVID-19 சீற்றம் இன்னும் குறையாக இக்காலக்கட்டத்தில், நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பரிந்துரைக்கின்றது.

ஏற்கனவே சபா சட்டமன்ற தேர்தலை நடத்தி, அதனால் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொண்டு, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah இதனை தெரிவித்தார்.

ஆனால் ஒருவேளை, தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், அதற்கான சரியான அணுகுமுறை குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்படும் என்றாவர்.

சபா Batu Sapi இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

2021 பட்ஜெட்: அனைவரும் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன் - நிதி அமைச்சர் 

நவம்பர் 6ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை, அரசியலாக்கப்படாது என நிதியமைச்சர் நம்புகின்றார்.

நாட்டின் ஒட்டுமொத்த நலன் கருதி அனைத்து MP-களும் அந்த பட்ஜெட்டுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக Tengku Datuk Seri Zafrul Abdul Aziz கூறியுள்ளார். 

கொரோனா பெருந்தொற்றினால் மந்தமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் அடுத்தாண்டு மீட்சிப் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather