← Back to list
COVID-19 தரவுகளில் எந்த மாற்றங்களும் இல்லை!
Oct 27, 2020
நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 தொற்றுச் சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் மாற்றியமைக்கப்படுவதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
அமைச்சு அன்றாடம் அறிவிக்கும் கொரோனா தரவுகள், ஒவ்வொரு மாநில பொது சுகாதார துறையிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என்பதை சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
நாட்டில் அவசரக் காலத்தை அறிவிக்க வேண்டி, தினசரிப் பதிவாகும் கொரோனா சம்பவங்கள் குறித்த தகவல்களில் அமைச்சு வேண்டுமென்றே மாற்றங்கள் செய்வதாக, அரசியல்வாதி ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தது தொடர்பில் Dr Noor Hisham விளக்கமளித்தார்.
ஆகக் கடைசியாக, நாட்டில் பதிவான ஆயிரத்து 240 COVID-19 சம்பவங்களில், தொள்ளாயிரத்து 27 சம்பவங்கள் சபாவை உட்படுத்தியவை.
எழுவர் அத்தொற்றுக்கு பலியான வேளை, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 744ஆக அதிகரித்துள்ளது.
இவ்வேளையில், சபா, நெகிரி செம்பிலான் மற்றும் பேராக்கை உட்படுத்தி மூன்று புதிய cluster-கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்!
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO, நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.
பாலர் பள்ளிகள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள் ஆகியவை அதிலடங்கும்.
இதையடுத்து, ஆசிரியர்களும் – மாணவர்களும் தொடர்ந்து தங்களது கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை வீட்டில் இருந்தப்படியே மேற்கொள்ளவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்களை அமைச்சு அறிவுறுத்தியிருக்கின்றது.
அம்னோ தொடர்ந்து ஆதரவளிக்கும்!
Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான Perikatan Nasional அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க, அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளது.
நேற்றிரவு ஏறக்குறைய 4 மணி நேரங்களுக்கு நீடித்த அச்சந்திப்பில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டதாக அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
அதே சமயம், PKR மற்றும் DAP-யுடன் ஒதுழைக்கப் போவதில்லை என்ற முடிவு நிலைநிறுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
COVID-19 பெருந்தொற்று பொருளாதார ரீதியாக மலேசியர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கையாள அரசாங்கம் இன்னும் தீர்க்கமான அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்பதும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather