← Back to list
மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியது Covid-19!
Oct 26, 2020
நாட்டில் இன்று இரண்டாவது நாளாக Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நான்கிலக்கத்தை எட்டியுள்ளது!
புதிதாக ஆயிரத்து இருநூற்று நாட்பது சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அவற்றுள் ஆயிரத்து இருநூற்று 38 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
மூன்று புதிய Clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏழு புதிய மரணங்கள் பதிவாகியுள்ள வேளை, பலி எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது.
___________
KL, Putrajaya மற்றும் சிலாங்கூரில் இன்றோடு முடிவடையவிருந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob இன்று அதனை அறிவித்தார்.
அவ்விடங்களின் நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி வரை CMCO நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
இதனிடையே நெகிரி செம்பிலான், Nilaiயிலும் Covid-19 நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அங்கு வரும் புதன்கிழமை தொடங்கி இரு வாரங்களுக்கு CMCO அமுலுக்கு வருகின்றது.
________
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOPக்களை மீறியதற்காக நேற்று காவல் துறை நாடு முழுவதும் 857 பேரைக் கைது செய்துள்ளது!
அவர்களில் 847 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு 10 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
வேலையிடங்களுக்குச் செல்ல நிறுவனங்கள் கொடுத்துள்ள அனுமதி கடிதத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது!
அவ்வாறு செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.
________
இதனிடையே சிலாங்கூர் PJவில் அலுவலகங்களில் தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றுப்படுவதைக் காவல் துறை கண்காணிக்கவிருக்கின்றது.
சுகாதார அமைச்சின் ஆலோசனையை அடுத்து, வேலையிடங்களில் ஏற்படும் Cluster களைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படுவதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சுவாசக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், உடல் வெப்பத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட SOPக்கள் கண்காணிக்கப்படும் என அத்துறை தெரிவித்தது.
_________
3D எனப்படும் அழுக்கு, ஆபத்து மற்றும் இழிவான வேலைகளை மலேசியர்கள் புறக்கணிக்கக் கூடாது!
கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்துக்கு இருந்தாலும், நடப்பு சூழலில் கிடைத்த வேலையை செய்வது நமது தரத்தை எவ்விதத்திலும் குறைத்து விடாது என்கிறார் மனித வள அமைச்சர் Datuk Sri M சரவணன்.
நடப்பு பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather