← Back to list
மாமன்னரின் முடிவு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்!!
Oct 26, 2020
நாட்டில் தற்போதைக்கு அவசரக் காலத்தை அறிவிப்பதற்கான அவசியம் இல்லை என்ற மாமன்னரின் முடிவை, அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக, பிரதமர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு நாட்டு மக்களை COVID-19 பெருந்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பதே முக்கியம் என்பதனை அமைச்சரவை உணர்ந்திருப்பதாகவும் Tan Sri Muhyiddin Yassin கூறியுள்ளார்.
மாமன்னரின் அம்முடிவு குறித்து அமைச்சரவை முழுமையாக விவாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், தனது தலைமைத்துவத்தில் மாமன்னர் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அரசாங்கத்தின் நிலைத்தன்மை பாதித்து விடக்கூடாது என்பதற்காக மாமன்னர் வழங்கியுள்ள அறிவுரைகளை தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று, மலாய் ஆட்சியாளர்களுடனான சந்திப்புக்கு பிறகு, நாட்டில் அவசரக் காலத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தமது முடிவை மாமன்னர் அறிவித்தார்.
அரசாங்கத்தை நிலைக்குலையச் செய்யும் அரசியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு, மாமன்னர் அனைத்து அரசியல்வாதிகளையும் வலியுறுத்தி இருக்கின்றார்.
இவ்வேளையில், பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இன்று சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துகிறார்.
சொந்த தேவையா? காவல் துறை எச்சரிக்கை!
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், வேலைக்குச் சென்று வர முதலாளிகள் கொடுத்த அனுமதிக் கடிதத்தை, சில தொழிலாளர்கள் வாரக் கடைசிகளில் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட முதலாளிகளை உடனடியாக தொடர்புக் கொண்டு, உண்மை நிலவரத்தை கேட்டறிய காவல் துறை தயங்காது என பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய சம்பவங்கள் அனைத்தும் உள்ளூரில் பரவியவை!
நாட்டில் புதிதாக 823 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அவை அனைத்துமே உள்ளூரில் பரவியவை என, சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
புதிதாக, 8 மரணங்கள் நிகழ்ந்துள்ள வேளை, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 202ஆக அதிகரித்திருப்பதாக Tan Sri Dr Noor Hisham Abdullah கூறினார்.
புதிதாக 9 COVID-19 cluster-கள் உருவாகியுள்ளன.
அவற்றில் நான்கு, சபாவிலும், மற்றவை சரவாக், சிலாங்கூர், பினாங்கு, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலானிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுவாசக் கவசம் அணிவதில் இன்னும் மெத்தனம்!
COVID-19 தொடர்பான SOP-களை மீறியதற்காக, ஆகக் கடைசியாக 600க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இன்னும் அதிகமானோர் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவதோடு, சுவாசக் கவசத்தை அணிவதிலும் மெத்தனம் காட்டி வருவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather