← Back to list
Istana Negara வளாகத்தில் ஒன்று கூட வேண்டாம்
Oct 25, 2020
Istana Negara வளாகத்தில் ஒன்று கூட வேண்டாம் என காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இன்று பிற்பகலில் Istana Negaraவில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறலாம் எனக் கூறப்படும் நிலையில் அது அவ்வாறு ஆலோசனை கூறியது.
இதனிடையே Istana Negara வளாகத்தில் செய்திகளையும் தகவல்களையும் தொகுத்து வழங்கும் ஊடகங்கப் பணியாளர்கள் Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அவர்களைப் பதிய MySejahtera செயலி பயன்படுத்தப்படும்.
அதோடு அனைவரும் சுவாசக் கவசங்களை அணிந்திருக்க வேண்டியது அவசியம் என காவல் துறை வலியுறுத்தியது.
மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin முன் வைத்த பரிந்துரைகள் குறித்து மாமன்னர் கலந்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர், KL, Putrajayaவில் தற்போது அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படலாம்.
Covid-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகம் பதிவாகி வந்தால், அது சாத்தியம் என சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah கோடி காட்டினார்.
சிலாங்கூர், KL, Putrajayaவில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய CMCO, நாளை மறுநாள் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் சபாவில் அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
அங்கு CMCO நவம்பர் 7 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
சபா மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Covid-19 பரவலைத் தடுப்பதில் முன் வரிசைப் பணியாளர்களுக்கு உதவ ஆயிரத்து 200க்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களை பணியில் அமர்த்த பொதுச் சேவைத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தாதியர்கள், மருத்துவ உதவி அதிகாரிகள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
அடுத்தாண்டின் முதலாவது காலாண்டில் Covid-19னுக்கான தடூப்பூசி கையிருப்பை மலேசியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள எட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சும் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சும் தெரிவித்துள்ளன.
கெடா, kota Setarரில் இரு தேசிய இடை நிலைப் பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
அப்பள்ளிகளில் Covid-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதை அடுத்து இம்மாதம் 31 ஆம் தேதி வரை அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே பேராவிலும் இரு பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
Kajang MRT வழித்தடத்தில் பணியாற்றும் செயல்பாட்டுப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு COVID-19 பீடித்திருப்பதாக Rapid Rail தெரிவித்திருக்கிறது.
அதனை அடுத்து அந்நபர் சென்ற பகுதிகளை கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அது கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather