← Back to list
சட்டம் எல்லாருக்கும் சமமானதே!
Oct 23, 2020
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, 14 நாட்களுக்கு தன்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள தவறிய மத்திய அமைச்சர் Datuk Mohamad Khairuddin Aman Razali-க்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற முடிவை, தேசிய சட்டத் துறைத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியிருக்கின்றது.
சட்டத் திட்டங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது; அதிலும் தலைவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அம்மன்றம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய அந்த அமைச்சருக்கு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான சுகாதார அமைச்சின் உத்தரவுக் கடிதம் கிடைக்காததை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என முன்னதாக முடிவெடுக்கப்பட்டது.
ஈராயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா!
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை, ஈராயிரத்து 145 மாணவர்களுக்கு, COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஆயிரத்து 200க்கும் அதிகமான மாணவர்கள், செப்டம்பரில் தீவிரமடைந்த மூன்றாம் கட்ட கொரோனாப் பரவலால் பாதிக்கப்பட்டவர்கள் என Dr Noor Hisham கூறியிருக்கின்றார்.
அந்த எண்ணிக்கையில், 587 பேர் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய 670 பேர் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் என்றாவர்.
சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்!
பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, அமைச்சர்கள் தற்போது புத்ராஜெயாவில் கூடியிருக்கின்றனர்.
அக்கூட்டத்தில், COVID-19 பரவலை தொடர்புப்படுத்தி, பொது சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மருந்துக்கு அனுமதி!
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையளிக்க REMDESIVIR மருந்தைப் பயன்படுத்த முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்மருந்தினால் எந்த பலனும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் WHO அண்மையில் தான் கூறியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஆகக் கடைசியாக அம்மருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் Donald Trump-புக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றது.
உள்நாட்டு நிபுணர்கள் உதவுவார்கள்!
சிலாங்கூரில் அடிக்கடி நிகழ்ந்து வரும் தண்ணீர் மாசுபாட்டுப் பிரச்னையை களைய, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள சுற்றுச்சூழல் தடவியலாளர்களுடன் ஒத்துழைக்குமாறு, அரசாங்கம் வலியுறுத்தப்படுகின்றது.
அத்தகைய நிபுணர்கள் தான், அனைத்துலக அளவிலான தரவுகளை கொண்டு, மாசுபாடுப் பிரச்னை குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்து உதவுவார்கள் என, UPM பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வன மற்றும் சுற்றுச்சூழல் துறை மூத்த விரிவுரையாளர் Mohd Yusoff Ishak தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் ஆற்றில் நீர் மாசுபாடு காரணமாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று முறை தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
இவ்வாண்டு இதுவரை தண்ணீர் மாசுபாடுகள் தொடர்பில் சிலாங்கூரில் மட்டும் 8 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather