← Back to list
வழக்கமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்!
Oct 22, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 847 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 842 உள்நாட்டில் பரவியவை.
சபாவில் தொடர்ந்து மிக அதிகமாக 578 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், Labuan, KLலில் கணிசமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐவர் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூர், சபா, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் புதிதாக ஆறு clusterகள் அதாவது திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.
Covid-19 நோயாளிகளில் இரண்டில் ஒருவர் அல்லது 50.2 விழுக்காட்டினருக்கு அக்கிருமித் தொற்று உறுதிச் செய்யப்படும் போது அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை.
தேசிய சுகாதாரக் கழகம் கிட்டதட்ட ஐயாயிரத்து 900 Covid-19 நோயாளிகள் மீது நடத்திய ஆய்வில் அது தெரிய வந்திருக்கிறது.
இருமல், காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை Covid-19னுக்கான பொதுவான அறிகுறிகளில் அடங்கும்.
சபா, Lahad Datuவில் Anjung Teduh, Felda Sahabatட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
வரும் சனிக்கிழமை முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை அங்கு EMCO அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வேளையில் Covid-19 சம்பவங்கள் இன்னும் பதிவாவதால், Sempornaவில் ஆறு பகுதிகளில் EMCO நவம்பர் ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
நாட்டின் வட பகுதி மற்றும் சிலாங்கூரில் உள்ள ஒன்பது சிறைச் சாலைகளில் நாளை தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை EMCO அமலுக்கு வருகிறது.
சிறைச் சாலைகளில் Covid-19 சம்பவங்கள் அதிகம் காணப்படுவதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 636 பேர் கைது செய்யப்படனர்.
அவர்களில் 595 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
வீட்டில் இருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சம்பளம் வழக்கம் போல் வழங்கப்பட வேண்டும்.
ஆள்பலத் துறை அமைச்சு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
அதே நேரம், முதலாளிகள் தங்களது ஊழியர்களை வருடாந்திர விடுமுறை அல்லது சம்பளம் இல்லாத விடுமுறை எடுக்க வற்புறுத்த முடியாது என அது நினைவுறுத்தியது.
சிலாங்கூர், KL, Putrajaya மற்றும் சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், SOCSOவின் பரிவுமிக்க பரிசோதனைத் திட்டத்தின் கீழ் இலவசமாக Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அவ்வாறு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள விரும்பும் பணியாளர்கள் MyEG இணைய அகப்பக்கத்தில் மேல் விவரங்களைப் பெறலாம்.
மூன்று வேலை நாட்களுக்குள் பரிசோதனை முடிவு வெளியிடப்படும் என MyEG தெரிவித்தது.
முடிவுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம் என்றும் அது கூறியது.
நெகிரி செம்பிலானில் சிரம்பான் மாவட்டம் Covid-19 சம்பவங்கள் அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுவதை அம்மாநில அரசு மறுத்துள்ளது.
உண்மையில் சிரம்பான் மஞ்சள் மண்டலப் பகுதிகள் பட்டியலில் உள்ளதாக அது தெளிவுபடுத்தியது.
பேரா, Lumutட்டில் உணவகமொன்றில் இருந்து சுய பாதுகாப்பு ஆடை அணிந்திருந்த மருத்துவப் பணியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நபருக்கு Covid-19 இல்லை.
தமது குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவ்வுணவகத்தின் உரிமையாளர் தெளிவுபடுத்தினார்.
சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட எண்மர் விசாரணைக்காக ஒரு வாரத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைக்கேடு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய ஆயிரத்து 300 பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather