Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் அறுவர் மரணம்!

Oct 21, 2020


நாட்டில் Covid-19னுக்கு மேலும் அறுவர் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 732 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவற்றில் 724 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை. 

சபாவில் மிக அதிகமாக 535 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மேலும் 580 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

பினாங்கு, Seberang Perai சிறைச் சாலை மற்றும் அதன் ஊழியர் குடியிருப்பில் நாளை தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது. 

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதால் அவ்வாறு செய்யப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார். 

அதே சமயம் சபா, Sandakanனில் PPR Taman Harmoniயிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமையில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி வரை EMCO அங்கு அமலில் இருக்கும்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து சிலாங்கூர், KL, Putrajaya, சபா மற்றும் Labuanனில் தயாரிப்பு, சேவை, கட்டுமானம் போன்ற துறைகளில் பணியாற்றுவோரில் 25 விழுக்காட்டினர், நாளை முதல் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

அதே சமயம் கணக்கியல், நிதி, நிர்வகிப்பு, சட்டம், திட்டமிடல், தகவல், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் 10 விழுக்காட்டினர் அலுவலகங்களில் பணி புரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

எனினும் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் அவர்கள் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டும். 

இவ்வேளையில், பொதுச் சேவைத் துறையில் பணி புரிவோரில் அதிகபட்சமாக 30 விழுக்காட்டினர் மட்டுமே அலுவலகங்களில் வேலையைத் தொடர அனுமதிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்து வேலை செய்வோர் சுழல் முறையில்  பட்டியலிடப்படுவதை உறுதி செய்யுமாறு துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Covid-19னுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சர் Datuk Dr Mohd Khairuddin Aman Razaliக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என தேசிய சட்டத்துறை முடிவு செய்துள்ளது.

தனிமைப்படுத்தல் உத்தரவை மேற்கொள்ள அவருக்கு பாரம் ஏதும் வழங்கப்படாததைச் சுட்டிக் காட்டி தேசிய சட்டத்துறை அலுவலகம் அம்முடிவை எடுத்துள்ளதாக Bukit Aman விளக்கியது.

ஜூலை மாதம் துருக்கியில் இருந்து திரும்பிய Mohd Khairuddin, தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளத் தவறியதை அடுத்து சுகாதார அமைச்சு அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம்  விதித்தது குறிப்பிடத்தக்கது.  

சிலாங்கூரில் ஏழு துணை மாவட்டங்கள் Covid-19 சம்பவங்கள் அதிகம் உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. 

கிள்ளான், காப்பார், Sungai Buloh, Petaling, Damansara, Kajang, கோலலங்காட்டில் Tanjung 12 ஆகியவையே அத்துணை மாவட்டங்களாகும்.

கெடாவில், இரண்டு, பினாங்கில் இரண்டு, பேராவில் ஒன்று, சபாவில் 34 துணை மாவட்டங்களும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சிலாங்கூர், KL, Labuanனில் ஊழியர் சேமநிதி வாரியம் தனது முகப்புகள் உட்பட அனைத்து அலுவலங்களையும் நாளை முதல் தற்காலிகமாக மூடுகிறது.

பின்னர் அறிவிக்கபப்டும் தேதி வரை அவை மூடப்பட்டிருக்கும் என EPF தெரிவித்தது.

இணையம் வாயிலான நேர்காணல்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பினாங்கு, Nibong Tebalலில் உள்ள Seri Sentosa தேசியப் பள்ளியில் Covid-19 தொற்றியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர் என மாநில கல்வித்துறை தெரிவித்தது.

நெகிரி செம்பிலானில் தேசிய இடைநிலைப் பள்ளியொன்றில் Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து அப்பள்ளியை 7 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர், Petaling Jayaவுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் சில சாலைகள் மூடப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவலை காவல் துறை மறுத்திருக்கிறது.

சாலைத் தடுப்புச் சோதனைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன; சாலைகள் ஏதும் மூடப்படவில்லை என அது தெளிவுபடுத்தியது.

PJவில் மூன்று இடங்களில் சாலைத் தடுப்புச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட  அட்டவணையுடன் தங்களது ரயில் மற்றும் பேருந்து சேவைகள் காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு வரை செயல்படும் என Prasarana கூறியுள்ளது. 

சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் நிறுவனமொன்றின் இயக்குனர், அவரது மகன் உட்பட எண்மர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வெளையில் இன்று மாலை வரை, கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் 94 விழுக்காட்டு இடங்களில் நிலைமை முழுமையாகச் சீரடைந்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather