← Back to list
இன்று 865 Covid-19 சம்பவங்கள்!
Oct 19, 2020
நாட்டில் இன்று மட்டும் புதிய 865 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
அவற்றுள் 858 உள்நாட்டில் பரவியவை.
சபாவில் தான் ஆக அதிகமாக 643 சம்பவங்களும், அதற்கு அடுத்த இடத்தில் சிலாங்கூரில் 107 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூன்று மரணங்கள் பதிவானதை அடுத்து மரண எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.
________
இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் தர செயல்பாட்டு நடைமுறைகளை தேசிய பாதுகாப்பு மன்றம் இன்னும் நிர்ணயிக்கவில்லை!
அது குறித்து தமது தரப்பு MKN-னுடன் கலந்து பேசி அதற்கான SOPக்களை விரைவில் அறிவிக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சத் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
இதனிடையே நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நாடு முழுவதும் 649 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 606 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு 43 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
_______
அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கிய PERKESOவின் இரண்டாம் கட்ட சம்பள உதவித் தொகை திட்டத்திற்கு போலி விண்ணப்பம் செய்ய வேண்டாம் என மனித வள அமைச்சு நிறுவனங்களை நினைவுறுத்தியது!
கடந்த April மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே சில நிறுவனங்கள், போலி விண்ணப்பம் செய்து அப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதை PERKESO கண்டறிந்துள்ளதாக துணை அமைச்சர் Awang Hashim தெரிவித்தார்.
இதுவரை அத்திட்டத்தை போலியாக பெற்றதாகவும், உதவித் தொகை கிடைத்தும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும் சுமார் 281 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யும் நிறுவனம் கண்டறியப்பட்டால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, கொடுத்த நிதியைத் திரும்பக் கோரும் அதிகாரமும் PERKESOவுக்கு இருப்பதாக Awang Hashim எச்சரித்துள்ளார்.
_________
Putrajayaவில் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்து துப்புறவு செய்யும் பணிகளுக்காக அரசாங்கம் 2.6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது!
அப்பணிகள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிவாசல்கள், பேரங்காடிகள், பொது இடங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் Tan Sri Annuar Musa தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் அதிகம் வந்து போகும் இடமாக Putrajaya இருப்பதால், அவ்விடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
________
பேராவில் மாணவர் ஒருவருக்கு Covid-19 பீடித்துள்ளதை அடுத்து அங்கு மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஏற்கனவே அம்மாநிலத்தில் ஏழு பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மலாக்காவிலும், Covid-19 காரணமாக பள்ளியொன்று ஏழு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
__________
ஐரோப்பாவில் Covid-19 காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.
நெதர்லாந்தில் தான் ஆக அதிகமாக 43 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்களும், இத்தாலியில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்களும், Spain-னில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியிருக்கின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather