Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அனுமதி பாரத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Oct 15, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 589 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிக அதிகமாக சபாவில் 304 சம்பவங்களும் அடுத்து சிலாங்கூரில் 150 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதுவரை பதிவானதில் மிக உயரிய எண்ணிக்கையாக 409 பேர் பூரண நலமடைந்துள்ளனர்.

மேலும் மூவர் அக்கிருமித் தொற்றுக்கு பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நான்கு clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் சிலாங்கூர், KL, Putrajayaவைக் கடந்து வேறு மாவட்டத்திற்கோ மாநிலத்திற்கோ செல்ல விரும்புவோர், அதற்கான அனுமதி பாரத்தை PDRMமின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அப்பாரத்தை அச்சிட்டு அதனைப் பூர்த்தி செய்து, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும்.

விவரங்களை உறுதிப்படுத்தி அதில் காவல் நிலையத் தலைவர் கையொப்பமிடுவார் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார். 

மற்றொரு நிலவரத்தில் Covid-19 சம்பவங்கள் அதிகம் காணப்படுவதால், Labuanனில் வரும் சனிக்கிழமையில் இருந்து இம்மாதம் 30 ஆம் தேதி வரை CMCO அமல்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் சொன்னார்.

CMCO அமலில் உள்ள காலம் நெடுகிலும் மாநில மற்றும் மாவட்டங்களின் முக்கிய எல்லைகளில் கண்காணிப்புப் பணிகளிலும் அமலாக்க நடவடிக்கைகளிலும் முக்கியத்துவம் செலுத்தப்படும் என சிலாங்கூர் காவல் துறை தெரிவித்திருக்கிறது. 

எனவே அவசிய, அவசரக் காரணங்கள் இல்லாமல் அநாவசியமாக மாநிலம் விட்டு மாநிலமோ, மாவட்டம் விட்டு மாவட்டமோ செல்ல வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது. 

சிலாங்கூர், KL, Putrajayaவில் நேற்று தொடங்கிய CMCO, வரும் 27 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.   

அமைச்சர் ஒருவர் Covid-19னுக்கான கட்டாய SOPயை மீறியது தொடர்பான விசாரணை அறிக்கையை இன்னமும் ஆய்வு செய்து வருவதாக தேசிய சட்டத்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது. 

நன்கு ஆய்வு செய்ததும், அதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அது Berita Harianனிடம் கூறியது. 

துருக்கியில் இருந்து நாடு திரும்பிய அந்த தோட்டத்தொழில், மூலப் பொருள் அமைச்சர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளத் தவறியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா, Masjid Tanahவில் இரு பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன. 

அப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு Covid-19 பீடித்துள்ளதே அதற்குக் காரணம். 

சிலாங்கூர், PJவில் உள்ள பேரங்காடி ஒன்றில் 63 Covid-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அப்பேரங்காடி நிர்வாகம் மறுத்திருக்கிறது.

நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கிட்டதட்ட 20 பேருக்கு மட்டுமே அக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அது விளக்கியது. 

எதிர்க் கட்சித் தலைவர் Datuk Seri Anwar Ibrahimமை வாக்குமூலம் அளிக்க, Bukit Aman நாளை அழைத்துள்ளது. 

புதிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் தம்மிடம் பெரும்பான்மை இருப்பதாகக் கூறியிருந்தது தொடர்பில் அந்த PKR தலைவர் விசாரணைக்கு அழைக்கப்படுவதாக Bukit Aman தெரிவித்தது.

அதன் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

Anwar கடந்த திங்கட்கிழமையே அழைக்கப்பட்ட நிலையில், மறுநாள்தான் அவரால் வர இயலும் எனக் கூறப்பட்டதை அடுத்து காவல் துறை வாக்குமூலம் பதிவு செய்வதை ஒத்தி வைத்தது.

----- 

ஜொகூரில் கடந்த வாரம் காரில் சென்ற ராணுவ வீரர் ஒருவரை வாகனத்தில் மோதி, அவர் மரணமடையக் காரணமாக இருந்த பெண்ணுக்கு ஆறாண்டுகள் சிறைத் தண்டனையும் எண்ணாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather