← Back to list
கெடா Kampung Padang Che Masசில் CMCO!
Oct 16, 2020
Covid-19னுக்கு நாட்டில் மேலும் அறுவர் பலியாகியிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 629 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 627 உள்நாட்டில் பரவியவை.
சபாவில் மிக அதிகமாக 489 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 245 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
புதிதாக மூன்று clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்தாண்டு மலேசியர்களுக்கு இலவசமாக Covid-19 தடுப்பூசி போட அரசாங்கம் 300 கோடி ரிங்கிட் ஒதுக்க வேண்டி வரலாம்.
இந்நாட்டிலுள்ள மக்களில் 70 விழுக்காட்டினருக்கு இலவச தடுப்பூசி போட அத்தொகை போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கூறினார்.
முதல் கட்ட தடுப்பூசியை அனைத்து மலேசியர்களுக்கும் இலவசமாக வழங்குமாறு தாம் பிரதமரிடமும் நிதியமைச்சிடமும் பரிந்துரைப்பதாகவும் Khairy Jamaluddin சொன்னார்.
கெடா, Balingங்கில் உள்ள Kampung Padang Che Masசில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இம்மாதம் 31 ஆம் தேதி வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனைத் தெரிவித்தார்.
அங்கு அதிகமான Covid-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதை அடுத்து CMCO அமல்படுத்தப்படுகிறது.
மலாக்கா, Lubok Cinaவில் இரு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இரு மாணவர்களுக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.
ஜொகூர், Skudaiயில் மாணவர் ஒருவருக்கு Covid-19 பீடித்துள்ளதை அடுத்து அவர் பயின்று வந்த ஆரம்பப் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது.
சிலாங்கூரில் உணவகங்களில் ஒரு மேசையில் ஐந்து பேர் வரை அமர அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியது.
தைப்பிங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என பேரா மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
அம்மாவட்டம் சிவப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும், அங்கு Covid-19 பரவல் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அது விளக்கியது.
சிலாங்கூர், PJவில் உள்ள பேரங்காடியொன்றின் 44 பாதுகாவலர்களுக்கு Covid-19 பீடித்திருப்பதாகக் கூறப்படுவதை அப்பேரங்காடி நிர்வாகம் மறுத்துள்ளது.
உண்மையில் ஒரு பாதுகாவலர் மட்டுமே அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அது தெளிவுபடுத்தியது.
இன்று நள்ளிரவு தொடங்கி RON95, RON97 பெட்ரோல் விலை தலா 1 சென் அதிகரித்து முறையே லிட்டருக்கு 1 ரிங்கிட் 68 சென்னுக்கும் 1 ரிங்கிட் 98 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் 5 சென் உயர்ந்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 74 சென்னாகிறது.
சிலாங்கூர், Shah Alamமில் கட்டுமானத் தளமொன்றுக்கு அருகே உடைந்த குழாயைச் சரி பார்க்கும் பணிகள் இன்றிரவு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நீர் விநியோகம் தடைபட்டுள்ள 59 பகுதிகளில் நாளை காலை பத்து மணியளவில் நிலைமை முழுமையாக வழக்கத்திற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather