Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்!

Oct 16, 2020


மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரிக்கப்பட வேண்டும் என கூறுகின்றார், மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் நிர்வாக மற்றும் மருத்துவ இயக்குநர் Dr Murallitharan M.

குறிப்பாக, புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்படும் போதே அதற்கான பரிசோதனையை விரைந்து மேற்கொள்வதன் வாயிலாக, அதன் பரவலையும், பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றாரவர்.

மக்கள் பரிசோதனை மேற்கொள்வதில் காட்டும் தாமதம் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

“The number of people who are being diagnosed in late stages eg: stage 3 and 4, has actually increased. What is the problem with this? When you’re diagnosed late, you have much poorer survival rates”

இந்த அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கபடுவதை முன்னிட்டு, Dr Muralli அக்கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார்.

ரத்த தானம் செய்ய முன்வாருங்கள்!

ரத்த தானம் செய்ய முன்வருமாறு பொது மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்; குறிப்பாக, B வகை ரத்தக் கையிருப்புக்கான தேவை அதிகரித்திருப்பதாக தேசிய ரத்த வங்கி தெரிவித்துள்ளது.

COVID-19 பெருந்தொற்றுப் பரவியுள்ள இக்காலக்கட்டத்தில் ரத்த தானம் செய்வதால், தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என அஞ்ச வேண்டிய தேவையில்லை என்றும் அது கூறியது.

நடப்பில் அவ்வங்கியில் ஈராயிரம் ரத்த கையிருப்பு பைகள் மட்டுமே உள்ளன; ஆனால், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளின் தேவைக்காக தினசரி ஏறக்குறைய 600 ரத்த கையிருப்பு பைகளை விநியோகிக்க வேண்டியிருப்பதாக அவ்வங்கி தெரிவித்தது.

மூச்சுத் திணறல் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம்!

COVID-19 தொற்றுக்கான அறிகுறிகள் கொண்டவர்கள், விரைந்து சிகிச்சைப் பெறுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

சுவாசக் கோளாறு ஏற்படும் வரை காத்திருந்து, சிகிச்சைப் பெற தாமதிப்பதால் தான் சிலரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் நிலை ஏற்படுகின்றது; அதோடு, சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்கவும் காரணமாகி விடுவதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.


  "kebanyakan kes yang datang walaupun usia muda tetapi pada peringkat yang lewat, iaitu pada tahap sekurang-kurangnya tahap tiga ataupun empat. Walaubagaimanapun kita mensyorkan kepada mereka yang ada gejala sila datang ke hospital ataupun klinik pada peringkat yang awal. Jangan tunggu sampai sesak nafas ataupun kepayahan untuk bernafas barulah datang ke hospital” 

நாட்டில் ஆகக் கடைசியாக 589 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, சபாவில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நேற்று ஒரு நாளில் மட்டும் ஆக அதிகமாக 409 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டனர்.

இன்னும்  ஐயாயிரத்து 945 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வேளையில், நேற்று சிலாங்கூரில் மட்டும் பதிவான 150 கொரோனா சம்பவங்களில் 105, PJ-விலுள்ள பேராங்காடி ஒன்றுடன் தொடர்புடைய Utama Cluster-ரை உட்படுத்தியிருக்கின்றது.

அந்த cluster-ரின் கீழ் மொத்தமாக 132 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather