← Back to list
சீனாவுடன் இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தை!
Oct 13, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 660 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 658 உள்நாட்டில் பரவியவை.
சபாவில் பேரளவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் வாயிலாக 443 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
அடுத்து சிலாங்கூரில் மிக அதிகமாக 76, கெடாவில் 60, பினாங்கில் 23 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் நால்வர் மரணமடைந்திருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஆறு clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Covid-19 கிருமித் தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் மலேசியா சீனாவுடன் இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அதனைத் தெரிவித்தார்.
தங்களிடம் இருந்து தடுப்பூசியைப் பெறும் முக்கிய நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றிருப்பதாக சீனா கூறிருப்பதைச் சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு சொன்னார்.
அந்த தடுப்பூசி தற்போது ஆய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
சிலாங்கூர், KL, Putrajayaவில் இன்று நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும் நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் சில தர செயல்பாட்டு நடைமுறைகளை அறிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முடியாது.
என்றாலும் சில விதி விலக்குகள் இருப்பதாக அவர் சொன்னார்.
ஒரு வீட்டில் இருந்து இருவர் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வெளியே செல்ல முடியும்.
உணவகங்கள், உணவுக் கடைகள், அங்காடி வியாபாரிகள் உள்ள உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் குறிப்பிட்ட நேரம் வரை செயல்பட அனுமதியுண்டு.
பொது போக்குவரத்துச் சேவைகள் இயங்கலாம்.
சிலாங்கூர், KL, Putrajayaவில் இம்மாதம் 27 ஆம் தேதி வரை CMCO அமலில் இருக்கும்.
பினாங்கு தடுப்புச் சிறைச்சாலை சுற்று வட்டாரத்திலும் ஊழியர்கள் குடியிருப்பிலும் நாளை மறுநாள் தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
கடந்த மூன்றாம் தேதி காலை மணி 7.20க்கு KLலில் இருந்து சபா, Labuan சென்ற Air Asia விமானத்தில் பயணித்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு Covid-19 உறுதிச் செய்யப்பட்டிருப்பதே அதற்குக் காரணம் என Labuan சுகாதாரத்துறை கூறியது.
கெடாவில் மேலும் இரு பள்ளிகள் ஏழு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மேலும் அதிகமான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு Covid-19 ஏற்படுவதைத் தடுக்க அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.
அவ்விரு பள்ளிகளையும் சேர்த்து கெடாவில் இதுவரை எட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பிரதமராக தமக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Anwar Ibrahim கூறியிருப்பதை Istana Negara உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆயினும் அதற்கு ஆதாரமாக சம்பந்தப்பட்ட MPக்களின் பெயர்ப் பட்டியலை அந்த PKR தலைவர் காட்டவில்லை.
எனவே கூட்டரசு அரசியமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு மாமன்னர், Anwarருக்கு அறிவுரை வழங்கியதாக Istana Negara அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
முன்னதாக மாமன்னரைச் சந்தித்து விட்டு திரும்பிய Anwar, தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதற்கான வலுவான ஆவணங்களைத் தாம் மாமன்னரிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவற்றைச் சரிபார்க்க மாமன்னருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
சபா, Batu Sapi நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 23 ஆம் தேதியாகும்.
முன் கூட்டிய வாக்களிப்பு டிசம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் என SPR கூறியது.
சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் Datuk Liew Vui Keong அண்மையில் காலமானதை அடுத்து Batu Sapi தொகுதி காலியானது.
நெகிரி செம்பிலான், Batang Benar ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் மூன்றாவது நபர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் அந்த ஆற்று நீர் தூய்மைக்கேடு அடைந்ததால் சிலாங்கூரில் இரு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு நான்கு மாவட்டங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather