← Back to list
CMCO - கட்டாயம் தேவைப்படுகின்றது!
Oct 13, 2020
சிலாங்கூர், KL, Putrajaya மற்றும் சபாவில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வை அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருக்கின்றது!
அத்தேவை குறித்து விவரிக்கின்றார், சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah....
"walaupun kes yang direkodkan pada setiap hari kurang daripada 100 kes, tetapi ia secara konsisten merekodkan kes baru pada setiap hari, dan kes kes ini berselerak di lembah klang dan mula menular di semua daerah kecuali di Sabak Bernam, kita tidak boleh hanya melihat dan menuggu zon zon kuniung menjadi merah."
COVID-19 (பத்தொன்பது) சம்பவங்கள் பதிவாகி, தற்போது மஞ்சள் மண்டலங்களாக இருக்கும் பகுதிகள், சிவப்பு மண்டலங்களாக மாறும் வரை காத்திருந்து, அதன் பின்னரே CMCO அல்லது EMCO-வை அமுல்படுத்துவது என்பது சரிப்பட்டு வராது என்றாரவர்.
சபாவில், நள்ளிரவு தொடங்கி CMCO அமுலுக்கு வந்துள்ள நிலையில், சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில், இன்று நள்ளிரவு தொடங்கி அக்டோபர் 27ஆம் தேதி வரைக்கும் CMCO அமுலில் இருக்கும்.
இக்காலக்கட்டத்தில், மாநிலம் விட்டும் மாநிலம் பயணிக்க அனுமதி இல்லை; எனினும், வேலைக் காரணமாக பயணிக்க வேண்டியவர்கள், தங்களது முதலாளிகளிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
அதே சமயம், பாலர் பள்ளிகள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், பொதுப் பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.
ஒரு வீட்டில் இருந்து இருவர் மட்டுமே வெளியில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வர அனுமதி உண்டு.
அரசாங்க சேவைகளில் மாற்றம் இல்லை!
இவ்வேளையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் இந்த CMCO காலக்கட்டத்தில் அனைத்து அரசாங்க சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என அரசாங்க தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், தத்தம் துறைகளின் தேவைக்கு ஏற்ப சுழல் முறையிலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையைப் பயன்படுத்தியும் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் என அவர் கூறினார்.
சாலைத் தடுப்புச் சோதனைகள்!
CMCO உத்தரவை அடுத்து, சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில், காவல் துறை சாலைத் தடுப்புச் சோதனைகள் நடத்தவுள்ளது.
அந்த சாலை தடுப்புகள், கடந்த மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன் முறையாக அமுலுக்கு வந்த போது போடப்பட்டது போல, மலேசிய ஆயுதப் படை ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
MKN முடிவு அதிர்ச்சியளிக்கிறது - சிலாங்கூர் MB!
சிலாங்கூர் முழுவதையும் CMCO உத்தரவின் கீழ் கொண்டு வந்துள்ள தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக மாநில அரசாங்கம் கூறியிருக்கின்றது.
கிள்ளான், Gombak, Hulu Langat மற்றும் பெட்டாலிங்கின் ஒரு பகுதியில் மட்டுமே COVID-19 பத்தொன்பது தொற்றுச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன; மற்ற இடங்களில் அதன் பாதிப்பு மோசமாக இல்லை என்பதை மாநில Menteri Besar சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதையடுத்து, இன்று நள்ளிரவு தொடங்கி அமுலுக்கு வரவுள்ள CMCO உத்தரவு தொடர்பில், MKN-னிடம் சில பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என Menteri Besar தெரிவித்துள்ளார்.
பணிகள் முடிந்தன!
Shah Alam-மில் உடைந்த நீர் குழாயைப் பழுதுப் பார்க்கும் பணிகள், எதிர்பார்க்கப்படதை விட சீக்கிரமே முடிவடைந்து விட்டதாக Air Selangor கூறியிருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather