← Back to list
நோய் எதிர்புச் சக்தி கண்டறிய ஆய்வுகள் அவசியம்!
Oct 15, 2020
COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை கண்டறிய ஆய்வுகள் அவசியமாகின்றன.
அந்த ஆய்வுகள் வாயிலாக தான், அவர்களுக்கு மீண்டும் அத்தொற்று பீடிக்குமா என்பதை கண்டறிய முடியும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.
"sama ada akan merosot selepas 3 bulan ataupun tidak, jadi ini penting untuk kita melihat, kalau antibodi merosot selepas 3 bulan jadi m,ungkin pesakit tersebut boleh dijangkiti semula ataupun kalau kita lihat ada lagi kajian kajian lain yang mengenai kesan kesan iaitu pada jangka panjanag kepada organ organ tertentu."
அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகள், அவர் பெற்ற சிகிச்சை அனுபவங்கள் ஆகியவை, அந்த ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றாரவர்.
COVID-19 தொற்றில் இருந்து மீண்டவர்கள், சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த குழுவொன்று மேற்கொள்ளும் ஆய்வில் கலந்துக் கொள்ள முன்வருமாறு, முன்னதாக அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
மூன்றாவது அலை - மலேசியாவில் மட்டும் இல்லை!
COVID-19 பெருந்தொற்றின் மூன்றாம் அலை மலேசியாவை மட்டும் பாதிக்கவில்லை!
மாறாக, மற்ற உலக நாடுகளையும் தான் எனக் கூறுகின்றார், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob.
உலகளவில், இதுவரை 38 புள்ளி 4 மில்லியன் COVID-19 சம்பவங்கள் பதிவாகியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த, அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP-களை பின்பற்றும் அதே சமயம், சுயக் கட்டுப்பாடும் மிக அவசியம் என்றாரவர்.
மேலும் ஒரு புதிய Cluster!
இவ்வேளையில், நாட்டில் மேலும் ஒரு COVID-19 cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.
Kencana எனும் அந்த cluster, சிலாங்கூர், KL மற்றும் Johor ஆகியப் பகுதிகளில் பரவிய கொரோனா சம்பவங்களை உட்படுத்தியிருக்கிறது.
அந்த cluster-ரின் கீழ் இதுவரை 17 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அமைச்சு கூறியது.
ஆகக் கடைசியாக நாட்டில் 660 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஐயாயிரத்து 768ஆக அதிகரித்துள்ளது.
சாலை தடுப்புச் சோதனைகள் சுமூகம்!
சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வுக்கான நேற்றைய முதல் நாளில், காவல் துறையின் சாலை தடுப்புச் சோதனைகள் சுமூகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
காலையில் சில பகுதிகளில் நெரிசல் ஏற்பட்ட போதிலும், பொதுவில் சாலைப் பயனர்கள் CMCO-வுக்காக விதிமுறைகளை சிறப்பாக கடைப்பிடித்ததாக KL காவல் துறை கூறியுள்ளது.
இந்த CMCO காலக்கட்டத்தில், KL மற்றும் Putrajaya-வில் ஏறக்குறைய 29 சாலை தடுப்புச் சோதனைகள் போடப்படும் என காவல் காவல் துறை முன்னதாக கூறியிருந்தது.
இதனிடையே, சிலாங்கூரில் ஆயிரத்து 600 அதிகாரிகளை உட்படுத்தி, 64 சாலை தடுப்புச் சோதனைகள் போடப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை தெரிவித்தது.
சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில், CMCO அக்டோபர் 27ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
CMCO: சிலாங்கூரில் காலை சந்தைக்கு அனுமதி உண்டு!
CMCO காலக்கட்டத்தில் சிலாங்கூரில் அனைத்து காலை சந்தைகளுக்கும் அனுமதி உண்டு.
என்றாலும், இரவு நேரச் சந்தையைப் போன்றே அதற்கான SOP-கள் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என மாநில Menteri Besar கூறியிருக்கின்றார்.
இவ்வேளையில், முஸ்லீம் அல்லாதவர்களின் பதிவு திருமணங்களை நடத்த அனுமதி உண்டு; ஆனால், அதில் ஒரு நேரத்தில் ஆறு பேர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather