← Back to list
சிலாங்கூர், KL, Putrajayaவில் CMCO!
Oct 12, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 563 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 562 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
சபாவில் மிக அதிகமாக 291 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பினாங்கில் 141, சிலாங்கூரில் 69, KLலில் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.
6 புதிய clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.
KL, Putrajaya, மற்றும் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் வரும் 14 ஆம் தேதி முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
இம்மாதம் 27 ஆம் தேதி வரை CMCO அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பணி அட்டை அல்லது முதலாளிகளிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக, சமய, விளையாட்டு நடவடிக்கைளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
பள்ளிகள், உயர்க் கல்விக் கழகங்கள், taska, tadika, பொது பூங்காக்கள், வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை மூடப்படும்.
ஆயினும் தர செயல்பாட்டு நடைமுறை SOPயுடன் பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதியளிக்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், இன்று நள்ளிரவு தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை சபா மாநிலம் முழுவதும் CMCO அமலுக்கு வருகிறது.
அதே நேரம் Tawau, Felda Umasசில் அதே காலக் கட்டம் வரை MCO கடுமையாக்கப்படுகிறது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 660க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பொது இடங்களில் சுவாசக் கவசம் அணியாதது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதது ஆகியவற்றுக்காக பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர்.
சபாவில் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முன் வரிசைப் பணியாளர்களின் போராட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
அம்மாநிலத்தில் அக்கிருமித் தொற்று பரவல் சங்கிலியாகத் தொடர்வதைத் தடுக்க, இன்னும் ஆக்ககரமானத் திட்டங்களும் அணுகுமுறைகளும் எடுக்கப்படும் என Tan Sri Dr Noor Hisham Abdullah குறிப்பிட்டார்.
அவற்றில் சமூகக் கண்காணிப்பு, Covid-19 தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது, பரிசோதனை செய்வது, தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது ஆகியவையும் அடங்கும்.
நாட்டில் Covid-19 நிலவரத்தைக் கையாள ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக சுமார் ஆயிரத்து 900 சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க பொதுச் சேவைத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு அதிகாரிகள், தாதியர்கள், மருத்துவ உதவி அதிகாரிகள், சுற்றுச் சூழல் சுகாதார உதவி அதிகாரிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வேளையில் அவர்கள் நியமிக்கப்பட்டால், நாடு முழுவதும் உள்ள உள்ள தனிமைப்படுத்தல் மையங்களிலும் விமான நிலையங்கள் போன்ற அனைத்துலக நுழைவாயில்களிலும் பணியமர்த்தப்படுவர் என அது மேலும் கூறியது.
சிலாங்கூர், PJவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி தனது நடவடிக்கைகளைத் தொடரும் golf கிளப்பொன்றுக்கு எதிராக காவல் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
அக்கிளப்பின் சில ஊழியர்களுக்கு Covid-19 பீடித்திருப்பதை அடுத்து அதனை மூட ஏற்கனவே அறிவிக்கை கொடுக்கப்பட்டு விட்டதாக அது கூறியது.
PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahim விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பதை காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
புதிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் கூறி வருவது குறித்து காவல் துறையில் சில புகார்கள் பெறப்பட்டிருப்பதாக Bukit Aman தெரிவித்தது.
Port Dickson நாடாளுமன்ற உறுப்பினருமான Anwar எப்போது அழைக்கப்படுவார் என்பது இன்னும் தெரியவில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather