← Back to list
பெட்டாலிங் மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன!
Oct 12, 2020
சிலாங்கூர் Petaling வட்டாரத்தில் COVID-19 சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று தொடங்கி, அக்டோபர் 25ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.
அம்முடிவு அம்மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, இடைநிலை, தனியார் பள்ளி என 298 பள்ளிகளை உட்படுத்தியிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பேராக்கில் 6 பள்ளிகளையும், கெடாவில் 4 பள்ளிகளையும், இன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உட்படுத்திய COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வேளையில், தற்காலிகமாக மூடப்படும் பள்ளிகள் SPM பரீட்சார்த்த தேர்வுகளை மறு அட்டவணை இட்டுக் கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது.
சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்!
வரக்கூடிய நாட்களில், நாட்டில் COVID-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது!
COVID-19 தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமுள்ள தரப்பினரை உட்படுத்தி மேலும் அதிகமான கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதே அதற்கு காரணம் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
இருந்த போதிலும், அந்த எண்ணிக்கையை கையாள முடியும் என Dr Noor Hisham உத்தரவாதம் அளித்துள்ளார்.
"KKM dan pelbagai agensi akan melaksanakan aktiviti-aktiviti yang terbukti berjaya iaitu kita melaksanakan survellaince pada kes kes ILI, SARI, sebelum pembedahan dan juga ujian di pintu masuk antara bangsa, dan domestik. kita juga menjalankan surveilance di komuniti."
இவ்வேளையில், COVID-19 பெருந்தொற்றை கையாள, பொது மக்கள் மத்தியில் இருந்து மேலும் அதிகமான தன்னார்வலர்களை, சுகதார அமைச்சு வரவேற்பதாகவும, Dr Noor Hisham கூறினார்.
"kita tidak tetapkan berapa jumlah yang diperlukan, kerana pada masi ini kita melihat kepada keperluan, jika perjuangan kita dalam melandaikan lekok ini bagi gelomang 3 mengambil masa yang panjang maka anggota barisan hadapan dan juga belakang tadbir akan menjadi letih dan perlu diganti, jadi kita perlu perancangan awal untuk bersedia bagi apa apa keadaan."
சபாவில் மட்டும் இந்த தன்னார்வலர்களுக்கான தேவை இல்லை; மாறாக, தீபகற்பத்திலும் தான் என Dr Noor Hisham கூறினார்.
நாட்டில் புதிதாக 561 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளை, இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 587ஆக அதிகரித்திருக்கின்றது.
புதிய சம்பவம் இல்லை!
இம்மாத தொடக்கத்தில் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை உட்படுத்தி, புதிய COVID-19 சம்பவம் அடையாளம் காணப்படவில்லை.
அக்கூட்டத்திற்கு சென்றிருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அத்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Zulkifli Mohamad Al-Bakri-க்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தீபாவளி கொண்டாட்டம் குறித்த அறிவிப்பு விரைவில்!
COVID-19 பரவலுக்கு மத்தியில் இவ்வாண்டுக்கான தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் தீபாவளி சந்தைகள் குறித்த முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
"setakat ini kita belum membincangkan. saya percaya besok atau lusa kita akan bincang tentang sambutan perayaan deepavali ini, sama ada benarkan atau tidak dan sebagainya akan diputuskan oleh mesyuarat esok atau lusa. Insyaallah kita akan membuat keputusan, dan jika ada keputusan saya akan umumkan seperti biasa"
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather