← Back to list
MCO கொண்டு வரப்படாது!
Oct 06, 2020
அரசாங்கம் நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிடவில்லை.
Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்திருக்கிறார்.
நாட்டில் Covid-19 நிலவரம் குறித்து சிறப்பு உரை ஆற்றிய போது அவர் அதனைத் தெரிவித்தார்.
-----
நாட்டில் புதிதாக 691 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
மலேசியாவில் Covid-19 பரவத் தொடங்கியதில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிக உயரிய எண்ணிக்கை அதுவாகும்.
பதிவான 691 சம்பவங்களில் 688 உள்நாட்டில் பரவியவை.
கெடாவில் மிக அதிகமாக 397 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்து மிக அதிகமாக சபாவில் 219 சம்பவங்களும் சிலாங்கூரில் 38 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதிதாக நான்கு மரணங்கள் பதிவாகி மொத்த மரண எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
பேராவில், Batu சபாவில் Ramai-Ramai என இரு புதிய clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.
-----
சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், Labuanனுக்குச் செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அது வரும் 12 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அவசரத் தேவைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் காவல் துறையின் ஒப்புதல் தேவைப்படும் சில தரப்புகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabro Yaakob தெரிவித்தார்.
-----
Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வரும் சூழ்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், பள்ளி நிர்வாகங்களுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம்.
தேசிய ஆசிரியர், பணியாளர் சங்கம் NUTP, மாநில கல்வித் துறைகளையும் மாவட்ட கல்வி அலுவலகங்களையும் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தங்களது பிள்ளைகளை அனுப்ப பல பெற்றோர் தயங்கி வருவதால், நிலைமையைப் புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு அவ்விரு தரப்புகளையும் வலியுறுத்தியது.
-----
கெடா, Sungai Petani காவல் நிலையம் மூடப்பட்டிருப்பதாகக் கூறப்படிவதை Kuala Muda மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது.
அக்காவல் நிலையத்தைச் சேர்ந்த 32 ஊழியர்களுக்கு Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளாதாகக் கூறப்படுபதும் உண்மையில்லை.
18 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அக்காவல் நிலையம் வழக்கம் போல் இயங்குவதாகவும் அது தெளிவுபடுத்தியது.
-----
Sungai Semenyih நீர் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு தொடங்கி நீர் கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும்.
எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று முக்கியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் எல்லா பகுதிகளிலும் நீர் விநியோகம் 9 ஆம் தேதிக்குள் முழுமையாகச் சீரடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor தெரிவித்தது.
-----
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather