← Back to list
மிக உயரிய எண்ணிக்கை!
Oct 05, 2020
நாட்டில் புதிதாக 432 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் Covid-19 கிருமித் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான மிக உயரிய எண்ணிக்கை இதுவாகும்.
அவற்றில் 429 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
கெடாவில் மிக அதிகமாக 241 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்து மிக அதிகமாக சபாவில் 130 சம்பவங்களும் சிலாங்கூரில் 34 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
Covid-19னுக்கு இதுவரை 137 பேர் பலியாகியிருக்கின்றனர்.
கடந்த மூன்றாம் தேதி பிரதமர் துறையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட நபருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr. Zulkifli Mohamad al-Bakriக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தாம் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் தமது facebookக்கில் குறிப்பிட்டுள்ளார்.
சமய விவகார அமைச்சருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இரு வாரங்களுக்குத் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறார்.
எனினும் அது அரசாங்க அலுவல்களை ஒரு போதும் பாதிக்காது என அவர் குறிப்பிட்டார்.
சபாவில் Kota Kinabalu, Penampang, Putatan ஆகிய மூன்று பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
அப்பகுதிகளில் Covid-19 நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
அம்மூன்று பகுதிகளிலும் நுழையவும் வெளியேறவும் முடியாது.
அத்தியாவசியச் சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வட மலேசிய பல்கலைக்கழகமான UUM, கெடா, Sintokக்கில் உள்ள தனது பிரதான வளாகத்தை உடனடியாக மூடியிருக்கிறது.
அண்மையில் சபாவில் இருந்து தீபகற்பம் திரும்பிய மாணவர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பதே அதற்குக் காரணம்.
அதனைத் தொடர்ந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 979 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மிக அதிகமாக 944 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை வழி தெரிவித்தது.
Sungai Semenyih, Bukit Tampoi நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் அளவுக்கு தூய்மைக்கேடு ஏற்படக் காரணமான தரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரத்துவ தரப்புகள் விசாரணைகளை முடித்துக் கொண்டதும் காவல் துறை விசாரணை தொடங்கும் என சிலாங்கூர் காவல் துறை கூறியது.
தூய்மைக்கேட்டால், சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather