← Back to list
வீட்டிலேயே இருங்கள்! சிலாங்கூர் சுல்தான் அறிவுரை!
Oct 03, 2020
COVID-19 பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்குச் சென்று திரும்பியவர்கள், அல்லது அத்தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டுள்ளவர்கள், உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, சிலாங்கூர் சுல்தான் மாநில மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அப்பெருந்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள SOP-களை பின்பற்றுவதில் மெத்தனம் காட்ட வேண்டாம் என்றும் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவசியம் இல்லாத பட்சத்தில் பொது இடங்களுக்குச் செல்வதை, கூடுவதை தவிர்க்குமாறும் சுல்தான் அறிவுறுத்தியிருக்கின்றார்.
சிலாங்கூரில், Gombak மற்றும் Hulu Selangor-ரை உட்படுத்தி நேற்று இரு புதிய cluster-கள் பதிவாகியுள்ளன.
அவை இரண்டுமே அண்மையில் சபாவுக்குச் சென்று திரும்பியர்களை உட்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாங்கூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
மூன்றாம் கட்ட COVID-19 பரவலை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதில் இலக்கு வைக்கப்பட்டோருக்கான இலவச மருத்துவப் பரிசோதனையும் அடங்கும் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
அப்பரிசோதனைகள், கடந்த மாதம் 20 முதல் 26ஆம் தேதி வரை சபாவுக்குச் சென்று வந்தவர்களை உட்படுத்தியிருக்கும் என MB கூறினார்.
விடுப்பை ஐந்தாண்டுகள் வைக்க அனுமதிக்க வேண்டும்!
நாடு COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், முன்வரிசையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், இவ்வாண்டு இன்னும் எடுத்து முடிக்காமல் இருக்கும் விடுப்புகளை அடுத்த ஐந்தாண்டுகள் வரை வைத்திருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என, CEUPACS வலியுறுத்தியிருக்கின்றது.
அவரவர் பணிக்கு ஏற்ப அவர்கள் தொடர்ந்து கடமையாற்ற வேண்டியிருப்பதால், ஆண்டு விடுப்புகளை இன்னும் முடிக்க முடியாத சூழ்நிலையில் பல முன்வரிசைப் பணியாளர்கள் இருப்பதை CEUPACS சுட்டிக் காட்டியது.
நடப்பில் அவர்கள் பாக்கி விடுப்புகளை மூன்றாண்டுகள் வரை சேகரித்து வைத்திருக்க அனுமதி உண்டு என்றாலும், இவ்வாண்டு சூழ்நிலைகள் சற்று மாறுப்பட்டிருப்பதால், அவற்றை மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்க தாங்கள் பரிந்துரைப்பதாக CEUPACS கூறியுள்ளது.
சிறப்புக் கூட்டம்!
COVID-19 தொற்று தொடர்பில் பிரதமர் இன்று சிறப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்பார் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில், புதிதாக 287 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை இன்னும் ஆயிரத்து 540 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather