← Back to list
COVID-19 சம்பங்கள் மீண்டும் தீவிரமடையலாம்!
Oct 02, 2020
நாட்டில் COVID-19 சம்பவங்கள் மீண்டும் தீவிரமடைய வாய்ப்புண்டு!
தினசரிப் பதிவாகும் சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.
எனவே, அக்கோறனி நச்சில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"although it is not mandatory quarantine, it is actually onus is on the individual, to make sure that you do not infect your family, you continue to make sure that you stay at home and self regulate and self quarantine yoruself. whenever you have fever contact us, and then we will come and and fetch you from home or you come to the clinic"
நாட்டில் புதிதாக 260 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன;
அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை, ஆயிரத்து 334ஆக உயர்ந்துள்ளது.
இவ்வேளையில், நாட்டில் நாளுக்கு நாள் COVID-19 சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போவதை அடுத்து, தங்களது பிள்ளைகளை பள்ளிக்க அனுப்ப சிலாங்கூரில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் குறித்து சுகாதார அமைச்சு கருத்துரைத்திருக்கின்றது.
அக்கோறனி நச்சில் தொற்றின் ஆபத்து எப்போதுமே வெளியில் இருக்கத்தான் செய்கிறது; ஆனால் அதனை கடந்து சமாளிக்க வேண்டியிருப்பதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
"jadi setakat ini di sekolah kalau tak ada jangkitan kita ada biarkan, tapi contohnya di Kedah, sekolahnya ada jangkitan antara guru dan murid kita tutup sekolah itu, kita akan buat nyahcemar nyakuman di kawasan sekolah dan sebaginya. jadi risiko itu tetap ada tetapi setakaty ini tak ada laporan yang ada cluster di sekolah."
இதுவரை பள்ளிகளை உட்படுத்திய clsuter சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சொன்னார்.
தினசரிப் பதிவாகும் கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து, பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கூறி, சிலாங்கூர் கிள்ளானில் உள்ள அதிகமான பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், கோரிக்கை விடுத்துள்ளன.
மற்றொரு நிலவரத்தில், twitter-ரில் நேற்று தாம் பதிவேற்றம் செய்திருந்த தகவல் குறித்து சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah விளக்கமளித்திருக்கின்றார்.
COVID-19 பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அவசியம் இல்லாதப் பட்சத்தில் இயன்றவரை வீட்டிலேயே இருக்குமாறு தாம் கூறியது வெறூம் நினைவுறுத்தல் மட்டுமே.
அதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை PKP பழையபடி கடுமையாக்கப்படவிருப்பதாக தாம் கூறவில்லை என்றார் அவர்.
அதே சமயம், சபாவில் இருந்து தீபகற்பத்திற்கு திரும்புவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் Dr Noor Hisham பதிலளித்தார்.
நாட்டில் புதிதாக பதிவான 260 COVID-19 சம்பவங்களில், 31 சபாவுக்குச் சென்று வந்தவர்களை உட்படுத்தியிருக்கின்றது.
கடந்த ஜூன் மாதம் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்தப் பிறகு, நாட்டில் 2ஆவது முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று முதல் பரிசோதனைகள் கடுமையாக்கப்படும்!
இன்று தொடங்கி, பொதுப் போக்குவரத்து முனையங்களில், நிலையங்கள் மற்றும் சேவை முகப்புகளில் சுகாதாரப் பரிசோதனைகள் கடுமையாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
COVID-19 பரவலை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather