Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அமைச்சர் மீதான விசாரணை விரிவுப்படுத்தப்படும்!

Oct 01, 2020


துருக்கியில் இருந்து நாடு திரும்பிய பின், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறி, சர்ச்சையில் சிக்கிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் மீதான விசாரணைகளை இன்னும் ஆழப்படுத்துமாறு, காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தேசிய சட்டத் துறை, மீண்டும் காவல் துறையிடமே அனுப்பியிருப்பதாக Bukit Aman CID ஆணைய இயக்குநர் Datuk Huzir Mohamed கூறியுள்ளார்.

"kita telah dapat balik kita punya IP, ada beberapa tindakan lagi yang perlu kita laksanakan. Dalam masa terdekat ini kita percaya kita akan dapat selesaikan arahan-arahan yang telah dikeluarkan oleh pihak AG dan we will submit the IP again for AG to sign." 

அவ்விதிமுறை மீறலுக்கான அந்த மத்திய அமைச்சருக்கு வெறு ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கெதிராக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 

கெடாவில் புதிய cluster!

கெடா Alor Setar-ரில், Tembok எனும் புதிய COVID-19 cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த cluster-ரின் கீழ் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வேளையில், நாட்டில் புதிதாக பதிவான மொத்தம் 89 சம்பவங்களில், 86 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.

புதிதாக பதிவான இரு மரணங்களையும் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது.

இவ்வேளையில், சபா முழுக்க நாளை தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை; அங்கு 4 மாவட்டங்களில் மட்டுமே அந்த உத்தரவு கடுமையாக்கப்பட்டிருப்பதாக தேசியப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
 

வரவேற்கத்தக்க ஒரு திட்டம்! 

COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் சவால்களை சமாளிக்க, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள PENJANA KPT- CAP திட்டம் வரவேற்கத்தக்கது என மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் MEF நிர்வாக இயக்குநர் Datuk Shamsuddin Bardan கூறியுள்ளார்.

"youth unemployment is at the critical stage at this time because the unemployment rate for youth is close to 13% currently and it is very important for initiatives to be taken so that we are able to mange the unemployment of youths in a better way"

அரசாங்கம் அறிவித்துள்ள இத்திட்டத்தின் கீழ் உள்ள பயிற்சிகளை முடிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் உறுதிசெய்யப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin முன்னதாக அறிவித்தார்.
 

இதரச் செய்திகள்....

வெள்ளப் பேரிடர்: தயார் நிலையில் பல மாற்றங்கள்!

வழக்கமாகவே, அக்டோபர் மாத இறுதியில் தொடங்கக்கூடிய பருவமழைக் காலத்தை கருத்தில் கொண்டு, வெள்ளப் பேரிடரை கையாள்வதற்கான நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

COVID-19 பெருந்தொற்றுப் பரவல் இன்னும் தணியாததால், அம்மாற்றங்களில் தனிமனித இடைவெளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூட்டரசுப் பிரதேச பொது தற்காப்புப் படை துணை இயக்குநர் Leftenan Kolonel Mohd Zahri Abdul Aziz கூறுகின்றார்.

வெள்ள நிவாரண மையங்களில், கழிவறைப் பயன்பாடு மீதான SOP-களும் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறிய அவர், அம்மாற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் விளக்கமளிக்கப்படும் என்றார்.
 

Carbon monoxide பாதிப்புக்குள்ளான மாணவி உடல் நலம் தேறி வருகின்றார்!

கடந்த மாதம், பினாங்கில் காருக்குள் carbon monoxide வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 21 வயது கல்லூரி மாணவியின் உடல் நிலை சீரடைந்து வரும் நிலையில், அவர் விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மாணவியின் இரட்டை சகோதரிகளில் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர், சுயநினைவை இழந்து, உயிரிழந்தனர்.

தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது - Air Selangor

Bukit Jelutong அருகே நீர் குழாய் உடைந்ததை அடுத்து, சிலாங்கூர் Petaling-கில் ஏறக்குறைய 29 பகுதிகளில் நேற்றிரவு 11 மணி தொடங்கி பாதிக்கப்பட்டிருந்த றதண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக Air Selangor நிறுவனம் தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather