← Back to list
Covid-19: இரு புதிய மரணங்கள்!
Sep 30, 2020
நாட்டில் புதிதாக Covid-19 தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஈரிலக்கத்திற்குத் திரும்பியுள்ளது.
புதிதாக 89 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 86 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
ஆகக் கடைசியாக மேலும் இருவர் கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
-----
சபாவைக் காட்டிலும் சிலாங்கூரில் Covid-19 விரைவாகப் பரவுவதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
பத்தில் இருந்து 15 என ஒவ்வொரு நாளும் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அது சுட்டிக் காட்டியது.
இதற்கு முன் ஒரு நாளில் இரண்டில் இருந்து மூன்று சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தன.
-----
வெளிநாட்டில் இருந்து திரும்பிய அமைச்சர் ஒருவர் கட்டாயத் தனிமைப்படுத்தலை மீறியது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னமும் சரிப்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் இருந்து கிடைத்த ஆகக் கடைசி உத்தரவின் பேரில் அவ்வாறு செய்யப்படுவதாக PDRM கூறியது.
-----
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 98 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 34 பேர் இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் மனமகிழ் மையங்களில் கைதானவர்கள் என தற்காப்பு அமைச்சு அறிக்கை வழி தெரிவித்தது.
-----
2020 மக்கள் தொகை, வீடமைப்பு கணக்கெடுப்பில் இதுவரை 26 லட்சம் பேர் இணையம் வாயிலான e-Censusசில் விவரங்களைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய புள்ளி விவரத்துறை தெரிவித்திருக்கிறது.
E-Census வாயிலான பதிவு இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், இரண்டாம் கட்டமாக அத்துறையின் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களின் விவரங்களைத் திரட்டவுள்ளனர்.
-----
பினாங்கில், carbon monoxideட்டைச் சுவாசித்ததால் உடல் நிலை மோசமாகி பின்னர் சுய நினைவு திரும்பிய பெண் இவ்வாரத்தில் வீடு திரும்ப அனுமதிக்கப்படலாம்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; மூன்று பேர் உயிரிழந்த அச்சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் அவராவார்.
-----
கடந்த வாரத் தொடக்கத்தில் சிலாங்கூர், பூச்சோங், Bandar Kinraraவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் காவல் துறையிடம் பிடிபட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather