Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Moratorium: மக்களை அழுத்த வேண்டாம்!

Sep 30, 2020


வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலத்தை நீட்டிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அழுத்தம் தர வேண்டாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

"masih ada pihak yang menuntut tak boleh ke di sambung lagi tempoh moratorium, governor BN maklum pada saya mesyuarat semalam lebih 98% yang layak telah pun dapat tetapi mungkin yang tak dapat tu memerlukan lagi bantuan bantuan yang lebih. saya minta supaya bank lah, memberi pertimbangan untuk mengurangkan tekanan itu dan membantu mereka." 

ஏறக்குறைய 98 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு அக்கால நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டிருப்பதாக, Bank Negara தகவலை பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, அவ்வாய்ப்பு கிடைக்காதவர்களை வங்கிகள் கொஞ்சம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என Tan Sri Muhyiddin கேட்டுள்ளார்.

COVID-19 பெருந்தொற்று பரவியுள்ள இக்காலக்கட்டத்தில், பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு அரசாங்கம் எம்மாதிரியான உதவிகளை வழங்குகிறது என்பது தொடர்பில் பேசும் போது, பிரதமர் இத்தகவலை பகிர்ந்துக் கொண்டார். 

வங்கிகள் வழங்கிய அந்த moratorium சலுகை இன்றுடன் நிறைவடைகின்றது.

கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!

மலேசியாவில், இனங்களுக்கிடையிலான பதற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விவகாரமாக இருந்து வருவதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறுகின்றார்.

அடுத்த பத்தாண்டுகளில், இன ரீதியாக நிலவும் பொருளாதார ஏற்ற இறங்கங்கள் உள்ளிட்ட இனங்களுக்கிடையிலான இதர பதற்றங்களை குறைக்க, அரசாங்கத்தின் கூட்டு வளப்பப் பகிர்வு கொள்கை நிச்சயம் உதவும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

திடீர் தேர்தலா? சரியான முடிவு அல்ல!

இந்த இடைப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தலை நடத்த பரிசீலிக்கப்பட்டால், அது சரியான முடிவாக இருக்காது என,  மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar கூறுகின்றார்.

"Kita baru selesai process PRN di Sabah dan kita telah menyaksikan berlaku peristiwa ataupun perebakkan Covid-19 yang sangat luas dan besar diseluruh negara dari segi teknikal kesihatan awam kami merasakan ini bukanlah masa yang sesuai untuk mengadakan pilihan raya umum ataupun pilihan raya yang lain." 

சபாவில், COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை நடத்தினால், நாட்டில் அப்பெருந்தொற்று பரவல் இன்னும் மோசமடையலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.

இவ்வேளையில், அக்கோறனி நச்சில் தொற்றுக்கு சாத்தியமான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்படும் வரை, நாட்டில் பொதுத் தேர்த்தல் நடத்தும் யோசனையை ஒத்தி வைப்பதே நல்லது என  மூத்த சமூக ஆர்வலர் Tan Sri Lee Lam Thye-யும் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மைய சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்ததை அடுத்து, பொதுத் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங்கம் யோசிக்கலாம் என எழுந்துள்ள ஆருடங்கள் தொடர்பில் அவர்கள் கருத்துரைத்தனர்.


பேரங்காடிகளை மூடும் எண்ணம் இல்லை!

கிள்ளான் பள்ளத்தாக்கில் COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள பேரங்காடிகளை மூடும் எண்ணம் இல்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மாறாக, சம்பந்தப்பட்ட பேரங்காடிகளில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என சுகாதார துறை தலைமை இயக்குநர்  Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

"kita akan lihat pada lokaliti tempat tersebut,sama ada tempat tersebut ada ruang dan sebagainya tetapi kalau ruang yang sempit myungkin kita akan tutup contohnya restaurant  dan sebagainya. tetapi kalau ruang yang besar, tak kenal pasti tempat tersebut yang telah dilawati oleh mereka yang positif kita menasihatkan untuk menjalankan nyakuman dan nyacemar."

கிள்ளான் பள்ளத்தாக்கில், ஏறக்குறைய 10  நாட்களில், 5 பேரங்காடிகளைச் சேர்ந்த பணியாளர்களை உட்படுத்தி கொரோனா தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வேளையில், சபாவில் Jalan Bomba, Jalan Utara, சிலாங்கூரில் Benteng PK, Johor-ரில் Bakawali என நாட்டில் மொத்தம் 4 புதிய cluster-கள் உருவாகியுள்ளன.
 

வரவேற்கத்தக்க ஒன்று!


COVID-19 பெருந்தொற்றினால் வாழ்க்கை சூழ்நிலை மாறியுள்ள நிலையில், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு உதவ அரசாங்கம் அறிவித்துள்ள PENJANA KPT - CAP திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது!

ராகா செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது மலேசிய Kelantan பல்கலைக்கழகத்தின் மனித வள மற்றும் தொழில் தொடர்புத் துறை பேராசிரியர் DR Balakrishnan Parasuraman அவ்வாறு சொன்னார்.

பட்டதாரிகள் தாங்கள் விரும்பும் துறை இல்லாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்பை முதலில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் அறிவித்துள்ள இத்திட்டத்தின் கீழ் உள்ள பயிற்சிகளை முடிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் உறுதிசெய்யப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்திருந்தார்.

அப்பயிற்சிகள் அனைத்தும், வேலை நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

உயர்கல்வி அமைச்சின் Graduates Reference Hub for Employment and Training அல்லது GREaT அகப்பக்கம் வாயிலாக பட்டதாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather