← Back to list
e-Census: வெறும் தரவுகள் அல்ல!
Sep 29, 2020
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறுமனே சேகரிக்கப்படும் தரவுகள் அல்ல!
மாறாக, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோல் எனக் கூறுகின்றார், பொருளாதார வல்லுநர் மனோகரன் மொட்டையன்.
இந்த கணக்கெடுப்பின் வாயிலாக திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே, சமூகத்திற்கான சலுகைகளும் தீர்மானிக்கப்படும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
"உதாரணத்திற்கு, நமது இந்திய மக்கள் தொகை ஏழு விழுக்காடு என வைத்துக் கொள்வோம்; அந்த விழுக்காட்டின் அடிப்படையில் தான் இந்திய சமூகத்திற்கான எதிர்கால சலுகைகளை அரசாங்கம் நிர்ணயிக்கும். நம்மில் பலர், சில சலுகைகள் சரியாக கிடைப்பதில்லை, குறிப்பாக கல்வி ரீதியாகவும் சலுகைகள் போதுமானதாக இல்லை என சில சமயங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கெடுத்தால் தான் சமூகத்திற்கு என்ன தேவைகள் இருக்கின்றது என்பதை அரசாங்கத்தால் கண்டறிய முடியும். இது அனைத்து மலேசியர்களும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவே நான் கருதுகிறேன்; இதனை உங்கள் உரிமை என்றும் சொல்லலாம்; எனவே, e-Census-சில் உங்களது தரவுகளைப் பதிவிட தவறாதீர்கள்" என மனோகரன் தெரிவித்தார்.
எனவே, மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பின் தங்கிவிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
e-Census எனும் மின்னியல் கணக்கெடுப்பு முறை நாளை முடிவடையவுள்ளது.
மின்னியல் முறையிலான இந்த முதல் கட்ட கணக்கெடுப்பு நிறைவடைந்ததும், 2ஆம் கட்டமாக, அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்.
கிள்ளானில் இரு மாணவர்களுக்கு கொரோனா!
சிலாங்கூர் Pandamaran Jaya-வில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு COVID-19 கிருமித் தொற்றுப் பீடித்திருப்பதை மாநில சுகாதார துறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
உடன்பிறப்புகள் என நம்பப்படும் அம்மாணவர்களுக்கு, சபாவுக்குச் சென்று வந்த அவர்களது அண்ணன் வாயிலாக அத்தொற்றுப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேவை ஏற்பட்டால் மட்டுமே, கிள்ளான் மாவட்ட சுகாதார துறை உத்தரவுக்கு ஏற்ப அப்பள்ளியை மூடுவது பற்றி பரிசீலிக்கப்படலாம் என மாநில கல்வித் துறை கூறியுள்ளது.
மாமன்னர் கவலை!
நாட்டில் COVID-19 சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்க தொடங்கியிருப்பது குறித்து, மாமன்னர் கவலை தெரிவித்திருப்பதாக அரண்மை தகவல் வெளியிட்டிருக்கின்றது.
ஆகக் கடைசியாக, நாட்டில் 115 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; இதையடுத்து இதுவரை பதிவான மொத்த சம்பவங்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அப்புதிய சம்பவங்களில், 11 சபாவுக்கு பயணம் மேற்கொண்டவர்களை உட்படுத்தியிருக்கின்றது.
மேலும் 10 சம்பவங்கள் சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டுள்ள வேளை, திரங்கானுவில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் கிள்ளானில் Jalan Apas எனும் புதிய cluster உருவாகியுள்ளது.
இவ்வேளையில், சபாவில், Lahad Datu, Tawau, Kunak, Semporna ஆகியப் பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது.
அப்பெருந்தொற்றுக்காக நாட்டில் இன்னும் ஆயிரத்து 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பட்டதாரிகளுக்கான புதிய திட்டம்!
COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், வேலையில்லாமல் திண்டாடி வரும் பட்டதாரிகள், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள PENJANA KPT- CAP திட்டத்தில் தங்களைப் பதிந்துக் கொண்டு பயனடையுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்!
உயர்கல்வி அமைச்சு ஏற்படுத்தி தந்துள்ள Graduates Reference Hub for Employment and Training அல்லது GREaT என்றழைக்கப்படும் அகப்பக்கம் வாயிலாக, பட்டதாரிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
அத்திட்டத்தை, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin சிலாங்கூர் Bangi-யிலுள்ள UKM பல்கலைக்கழகத்தில் நேற்று தொடக்கி வைத்தார்.
அத்திட்டத்தின் கீழ் பயிற்சியை முடிப்பவர்களுக்கு, வேலை கிடைப்பது உறுதிச் செய்யப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறினார்.
பட்டதாரிகளை வேலைக்குச் சந்தைக்கு ஏற்ப தயார்படுத்துவதே அத்திட்டத்தின் நோக்கமாகும்.
நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களை உட்படுத்தியிருக்கும் அத்திட்டத்தின் கீழ், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உதவித் தொகை திட்டம்!
COVID-19 சீற்றத்தை பொருளாதார நெருக்கடி ஆளான நிறுவனங்களை காப்பற்ற அரசாங்கம் அறிவித்த சம்பள உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.
இதன் வழி, கடந்த மே மாதம் ஐந்து விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னை, ஜூலை மாதம் 4 புள்ளி ஏழாக குறைந்திருப்பதாக மனித வள அமைச்சு தெரிவித்தது.
இவ்வேளையில், அப்பெருந்தொற்றினால் இன்னும் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு உதவ ஏதுவாக KITA PRIHATIN கூடுதல் உதவித் திட்டம் வாயிலாக, பிரதமர் மேலும் 2.4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள்!
சபா சட்டமன்றத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு, BERSIH 2.0 தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அம்மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைக்க சபா மக்கள் கூட்டணி GRS-சை தேர்ந்தெடுந்துள்ள வாக்காளர்களின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கூறியது.
சபாவில் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்த GRS-சுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; ஆட்சிக் கவிழ்ப்பு என்ற ஒன்றை மேற்கொள்ள யாரும் முயற்சிக்ககூடாது என்றும் BERSIH கேட்டுக் கொண்டது.
Perikatan Nasional, Barisan Nasional மற்றும் Parti Bersatu Sabah-வை உள்ளடக்கிய GRS கூட்டணி, அத்தேர்தலில் 38 தொகுதிகளை கைப்பற்றியது.
இவ்வேளையில், சபா மாநில புதிய முதல் அமைச்சராக, மாநில BERSATU தலைவர் Datuk Seri Hajiji Mohd Noor, இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.
சனிக்கிழமை தேர்தலுக்கு பிறகு, யாரை முதல் அமைச்சராக முன்மொழிவது என்பது தொடர்பில் கடந்த இரு நாட்களாக சபா மக்கள் கூட்டணி GRS உறுப்புக் கட்சிகளிடையே குழப்பம் நீடித்து வந்த நிலையில், Datuk Seri Hajiji-ஜை தேர்ந்தெடுக்க அவை இணக்கம் கண்டுள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather