← Back to list
இன்று புதிதாக 115 பேருக்கு Covid-19!
Sep 28, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அச்சம்பவங்களில் 112 உள்நாட்டில் பரவியவை; சபாவில் மிக அதிகமாக 98 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மொத்த மரண எண்ணிக்கை 134 ஆக நீடிக்கிறது.
சபாவில் இன்று நள்ளிரவு தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
Lahad Datu, Kunak, Tawau, Semporna ஆகியவை அந்நான்கு மாவட்டங்களாகும்.
அம்மாவட்டங்களிலும் அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அம்மாவட்டங்களில் 9 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர்.
Covid-19 இவ்வாண்டு நாட்டின் சுற்றுலாத் துறையைப் பெருமளவு பாதித்திருக்கின்றது.
இதனால் எவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என கேட்கப்பட்ட போது, 45 பில்லியன் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டதாக மலேசிய உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஷண்முகம் கருப்பையா கூறினார்.
என்றாலும் தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சுற்றுலாத் துறை மெல்ல முன்னேறி வருவதாகக் கூறிய ஷண்முகம், தமது தரப்பு மேற்கொண்டு வரும் சிறு சிறு முயற்சிகளால், கூடிய விரைவில் அத்துறை வழக்க நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஷண்முகம் அத்தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சபாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க அம்மாநில Bersatu தலைவர் Datuk Seri Hajiji Noor, மாநில ஆளுனரிடம் இருந்து பதவி நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளார்.
அவரது பதவியேற்புச் சடங்கு நாளை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
நச்சுணவு பாதிப்புக்கு ஆளானதை அடுத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் தேசிய இருதய சிகிச்சைக் கழகம் IJNனில் சுகாதார சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர் சிகிச்சைகள் முடிந்த பிறகு மாமன்னர் Istana Negara திரும்புவார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெறிநாய்க் கடி, Rabies நோய் தொற்று கண்டிருப்பதை உறுதிபடுத்த சில வழிமுறைகள் உண்டு!
ஒருவருக்கு Rabies நோய் தொற்று இருப்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறியலாம் என்கிறார் கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் Dr Ganesan Shanmughon.
காய்ச்சல், உடல் வலி, தலைவலி, மயக்கம், கடிபட்ட இடத்தில் எரிச்சல் போன்றவை அதற்கான அறிகுறிகளாகும்.
இது மாதிரியான அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு Dr Ganesan கேட்டுக் கொண்டார்.
இன்று அனுசரிக்கப்படும் உலக Rabies விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அவர் அத்தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather