← Back to list
e-Census : அலட்சியம் வேண்டாம்!
Sep 28, 2020
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு, e-Census-சில் இன்னும் பங்கேற்காத மலேசியர்கள் விரைந்து அதனை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
செப்டம்பர் 30ஆம் தேதி தான் கடைசி நாள் என்றாலும், கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க, உடனே அதில் பங்கேற்குமாறு மலேசிய புள்ளி விவரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுவரை பத்தில் ஒரு மலேசியர் மட்டுமே e-Census கணக்கெடுப்பை நிறைவுச் செய்திருப்பதாக அத்துறை கூறியிருக்கிறது.
எனினும், எஞ்சிய ஓரிரு நாட்களில் அக்கணக்கெடுப்பில் 30 விழுக்காட்டு மலேசியர்களை பங்கெடுக்க வைக்கும் இலக்கை அடைய முடியும் என அத்துறை நம்புகிறது.
மின்னியல் முறையிலான இந்த முதல் கட்ட கணக்கெடுப்பு நிறைவடைந்ததும், 2ஆம் கட்டமாக, மக்களை நேரில் சந்தித்து அதிகாரிகள் கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்.
முதல் அமைச்சர் - இன்னும் முடிவாகவில்லை!
சபா மாநில முதல் அமைச்சர் யார் என்பதை மாநில ஆளுநர் இன்று முடிவு செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது!
யாரை முதல் அமைச்சராக தேர்ந்தெடுப்பது என்பதில், சபா மக்கள் கூட்டணி GRS இன்னும் தீர்க்கமான முடிவை எட்டாததை அடுத்து, முதல் அமைச்சர் நியமனம் குறித்து அறிவிக்க சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநர் கேட்டிருக்கின்றார்.
அப்பொறுப்புக்கு, Datuk Hajiji Mohd Noor நியமிக்கப்பட வேண்டும் என Perikatan Nasional கேட்டு வரும் நிலையில், தேசிய முன்னணி, Datuk Seri Bung Moktar Radin-னை முன்மொழிந்து வருகின்றது.
சபாவில், 73 தொகுதிகளில், 38 தொகுதிகளை கைப்பற்றி GRS வெற்றிப் பெற்றது.
சுகாதாரப் பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இவ்வேளையில், சபா சட்டமன்றத் தேர்தல் முடிந்து தீபகற்பம் திரும்புவோருக்கான COVID-19 பரிசோதனைகளை விரைவுப்படுத்த, KLIA மற்றும் KLIA 2-டில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபாவில் இருந்து திரும்புவோர் கட்டாயம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை அடுத்து, நேற்று விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முன்னதாக, சபாவில் இருந்து திரும்பியவர்கள் COVID-19 பரிசோதனைக்காக குறைந்தது 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளானதாக கூறி அதிருப்திகள் எழுந்தன.
அப்பரிசோதனைக்கான நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருக்கும் காணொளிப் பதிவுகளும் சமூக வலைத்தளங்களி பகிரப்பட்டிருந்தன.
மற்றொரு நிலவரத்தில், பாவில் இருந்து தீபகற்பத்திற்கு திரும்புபவர்கள், விமான நிலையத்தில் COVID-19 பரிசோதனையில், அக்கிருமித் தொற்றுப் பீடிக்கவில்லை என்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தேவையில்லை.
அதன் தொடர்பில் விளக்களித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob...
"tapi bukan 14 days quarantine, tidak perlu. kita cuma tunggu selepas result keluar, kalau result keluar dalam hari yang sama tiba-tiba you pandailan. 4 hours result keluar, so 4 hours la you pakai gelang. you boleh buat home quarantine, sampai rumah saja tiba-tiba, you dapat msg, result you negative, then you can straight away go to pejabat kesihatan, tunjukkan result then, they akan potong, then you're free."
இவ்வேளையில், நாடு முழுவதும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக, 500-க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரவு நேர கேளிக்கை மையங்களில் பிடிப்பட்டவர்கள் என அமைச்சர் சொன்னார்.
இதனிடையே, சபாவில் இரண்டு, KL, Setapak-கில் ஒன்று என, ஆகக் கடைசியாக நாட்டில் மூன்று புதிய COVID-19 cluster-கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து நாட்டில் பதிவான புதிய COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது; அவற்றில் 146 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
புதிதாக ஒரு மரணம் பதிவாகி, மொத்த மரண எண்ணிக்கை 134ஆக அதிகரித்தது.
இன்னும் தொள்ளாயிரத்து 50 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒத்தி வைக்கலாம்!
உயர் கல்விக் கழகங்களுக்கான புதிய மற்றும் நடப்பு மாணவர் நுழைவுக்கான பதிவுகள் அக்டோபரில் தொடங்குகின்றன!
இந்நிலையில், COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி, சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கான பதிவுகளை, நேரில் மேற்கொள்வதை ஒத்தி வைக்குமாறு, உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கான பதிவு மற்றும் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படலாம் என அமைச்சர் Datuk Dr Noraini Ahmad தெரிவித்துள்ளார்.
நிலைமை சீரானதும், மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட SOP-களை பின்பற்றி தங்களது உயர்கல்விக் கூடங்களுக்கு திரும்பலாம் என்றாரவர்.
சிவப்பு மண்டலங்களைச் சேராத மாணவர்களுக்கான உயர்கல்விக் கழகங்களுக்கான நுழைவு அட்டவணைப்படி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather