Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சபா சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெறுகின்றது!

Sep 26, 2020


இன்று காலை மணி 7.30க்குத் தொடங்கிய சபா சட்டமன்ற இடைதேர்தல் எல்லா இடங்களிலும் சுமூகமாக நடைபெற்று வருகின்றது!

வாக்களிப்பு நிலைமையைக் கண்காணிக்க தேர்தல் ஆணையத் தலைவர் Datuk Abdul Ghani Salleh, Chung Hwa சீனப் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட SOPக்களுடன், தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதோடு, வாக்காளர்களும் அதிகாரிகளும், சுவாசக் கவசம் அணியல், sanitizerரைப் பயன்படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் இன்றிரவு 10 மணி வாக்கில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

______

Ismail Sabri encouraged all returnees, including from Sabah, to take the Covid-19 swab test as a safety measure.

இதனிடையே சபாவில் வக்களித்து விட்டுத் திரும்பியவர்கள் Covid-19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கேட்டுக் கொண்டுள்ளார்.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவர் கூறினார்.

சபாவில் மிக அதிகமாக 97 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

______

சபா சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அம்மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்குக் கொண்டு வரப்படும் என வெளிவந்திருந்த தகவல் தற்காப்பு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்!

அந்த பொய்ச் செய்தியை நம்ப வேண்டாம் என Ismail Sabri வலியுறுத்தினார்.

எனினும் Tawau, Lahad Datu, Semporna ஆகிய இடங்களில் சுகாதார அமைச்சு அவ்வப்போது கண்காணிப்பு நடத்து வரும் என்றாரவர்.

______

ஆயிரத்து அறுநூருக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஊதிய உதவித் திட்டத்தைப் பெற, போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தங்களுக்கு வந்த சேர வேண்டிய நிதிஉதவி வரவில்லை என சுமார் 89 ஊழியர்கள் தங்களிடம் புகாரளித்திருப்பதாக மனிதவள அமைச்சர் Daruk M Saravanan தெரிவித்துள்ளார்.

இச்சம்பவன், குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், குற்றம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்ர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

_______

பேராக், Taipingகில் காவலதிகாரி ஒருவர் இரு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுவது குறித்து காவல் துறை விசாரிக்கின்றது.

அவ்விருவ மாணவிகளில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பில் விசாரித்து வருவதாக அத்துறை கூறியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather