← Back to list
'பாடும் நிலா' மறைந்தது!
Sep 25, 2020
பிரபல பின்னணி பாடகர் S.P பாலசுப்ரமணியம் சென்னையில் இன்று தமது 74 ஆவது வயதில் காலமானார்.
கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட S.P பாலாவுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.
அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து விட்டதாகவும் இருப்பினும் தொடர்ந்து சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளி வந்திருந்தன.
அதோடு அவரது உடல் நிலையிலும் அவ்வப்போது முன்னேற்றமும் சில சமயங்களில் பின்னடைவும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உடல் நிலை நேற்று திடீரென கவலைக்கிடமானது.
கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலை மிகவும் மோசமடைந்து அவர் இன்று பிற்பகலில் காலமானார்.
'பாடும் நிலா' என்றழைக்கப்படும் SP. Bala, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.
பாடகர் மட்டுமின்றி நடிகர், இசை அமைப்பாளர், பின்னணிக் குரல் கொடுப்பவர், திரைப்படத் தயாரிப்பாளர் என SPB பன்முகம் கொண்டவர்.
அவர் 6 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே S.P பாலாவின் மறைவு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், அவரது தீவிர ரசிகர்கள் என பலரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த்தும் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்களைத் தவிர்த்து மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர், கேரள முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், கவிப் பேரரசு வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திரையுலகக் கலைஞர்கள், பின்னணிப் பாடகர்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather