← Back to list
"Kita Prihatin": இது எதிர்பார்க்காத ஒன்று!
Sep 24, 2020
வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் காலத்தை நீட்டிப்பது தொடர்பில், பொது மக்கள், காலம் தாழ்த்தாமல் தங்களது வங்கிகளை தொடர்புக் கொண்டு பேசுமாறு, பொருளாதார வல்லுநர் மனோகரன் மொட்டையன் வலியுறுத்துகின்றார்.
"வேலை இழந்தவர்கள், சம்பளக் குறைப்புக்கு ஆளானவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், விரைந்து வங்கிகளிடம் பேசி, தங்களது பிரச்னைக்கு தீர்வுக் காண வேண்டும். நீங்கள் பேசினால் தான், வங்கிகள் உங்களுக்கு உதவ முடியும்" என மனோகரன் தெரிவித்தார்.
அந்த கால நீட்டிப்பு சலுகைக் கிடைக்காமல், மேல்முறையீடு செய்தவர்களில் 98 விழுக்காட்டுக்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் வெளியிட்ட தகவல் தொடர்பில் அவர் பேசினார்.
இதனிடையே, COVID-19 சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஆகக் கடைசியாக அறிவித்துள்ள Kita Prihatin எனும் கூடுதல் உதவித் திட்டம் எதிர்பார்க்காத ஒன்று என்றும் மனோகரன் கூறினார்.
"பொருளாதார வல்லுநர் என்ற முறையில், பட்ஜெட்டுக்கு முன்பாக, நாட்டின் பொருளாதாரத்தை அனைத்து வகையிலும் மீட்டெடுக்கக் கூடிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்தேன்; ஆனால், அது மக்களுக்கு நேரடியாக சென்று சேரக்கூடிய உதவித் திட்டமாக அமையும் என நான் நினைக்கவில்லை. இதற்காக அரசாங்கத்திற்கு தான் நன்றி தெரிவித்தாக வேண்டும்" என்றார்.
பொருளாதார சுமையை அறிந்து அரசாங்கம் வழங்கும் இந்த 2ஆம் கட்ட உதவியை, மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மனோகரன் வலியுறுத்தினார்.
"சிலருக்கு Moratorium சலுகை நீட்டிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், இன்னும் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; எனவே இந்த சூழ்நிலைகளை மனதில் வைத்து, அரசாங்கம் வழங்கக்கூடிய இந்த உதவியை நல்ல முறையில் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்" என தெரிவித்தார்.
குறிப்பாக, இந்தியர்களுக்கு நவம்பர் மாதம் பெருநாள் காலம் என்பதால், செலவுகளை இயன்றவரை கட்டுப்படுத்த முயற்சிப்பது சிறப்பாக இருக்கும் என்றாரவர்.
Kita Prihatin திட்டத்தின் கீழ், B40, M40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் மட்டும் இன்றி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரையும் இந்த உதவிகள் உட்படுத்தியுள்ளன.
இவ்வேளையில், சிறுத் தொழில் செய்வோருக்கான Geran Khas Prihatin உள்ளிட்ட சலுகைகளை தாம் வரவேற்பதாக, மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் MAICCI பொதுச் செயலாளர் Datuk Dr AT Kumararajah கூறுகின்றார்.
Image: The Star
"இத்திட்டத்தின் கீழ், இந்தியர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம். காரணம் இந்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வியாபாரங்களை பதிவுச் செய்துள்ளப் போதிலும், 99 ஆயிரத்து 797, அதாவது ஒரு லட்சத்திற்கு குறைவான வியாபாரங்கள் மட்டுமே active ஆக இருக்கின்றன; மைக்ரோ - எல்லா இனத்தையும் சேர்ந்தால் 77 விழுக்காடாக இருந்தாலும், இந்தியர்கள் மட்டும் நடத்தும் மைக்ரோ வியாபாரங்கள் விழுக்காடு 91ஆக இருக்கின்றது; கணக்கின் படி பார்த்தால், இந்தியர்கள் நடத்தக்கூடிய பத்தில் 9 வியாபாரங்கள் மைக்ரோ வியாபாரங்களாக இருக்கின்றன" என்றப் புள்ளி விவரத்தையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.
அந்த உதவித் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் செய்ய உதவி தேவைப்படுவோர் நாடு முழுவதும் உள்ள MAICCI அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இரவுச் சந்தை வியாபாரிகள் தொடங்கி சிறுத் தொழில் செய்வோருக்கான இந்த Geran Khas Prihatin உதவியின் கீழ், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதரச் செய்திகள்....
புதிய அரசியல் நெருக்கடி - எவ்வகையிலும் பாதிக்காது!
மலேசிய அரசியலில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பங்கள், பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னின் பணிகளை எவ்வகையிலும் பாதிக்கவில்லை!
பிரதமர் பதவிக்கு, Datuk Seri Anwar Ibrahim-மிடம் இருந்து நேரடி சவால் கிளம்பியுள்ள போதிலும், BERSATU தலைவருமான Tan Sri Muhyiddin, சபா சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய தமது பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
புதிய அரசாங்கத்தை அமைக்க தம்மிடம் பெருன்பான்மை இருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் அன்வார் அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தம்மிடம் உள்ள பெருன்பான்மை குறித்த தகவலை அன்வார் வெளியிடவில்லை.
சபாவில் 8ஆவது cluster!
சபாவில், COVID-19 cluster எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது; ஆகக் கடைசியாக, Tawau-வில் Udin எனும் cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டில் புதிதாக 147 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அப்பெருந்தொற்றுக்காக இன்னும் 770 மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மீண்டும் விருது வென்றது மலேசியா!
2019/2020ஆம் ஆண்டுக்கான சுகதாரம் மற்றும் மருத்துவத்திற்கான சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான விருதை மலேசியா மீண்டும் கைப்பற்றியிருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather