← Back to list
மலேசிய அரசியல் மீண்டும் பரபரப்படைந்துள்ளது!
Sep 23, 2020
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த எதிர்பாரா நகர்வுகளால் மலேசிய அரசியல் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது!
புதிய அரசாங்கத்தை அமைக்கத் தமக்குப் பெரும்பான்மை இருப்பதாக முதலில் PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahim திடீர் அறிவிப்பைச் செய்து அதிர வைத்தார்.
அவருக்கு தங்களது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவதாக AMANAHவும் DAPயும் அறிவித்ததால் எதிர்ப்பார்ப்பு கூடியது.
Anwar கூறுவது போல் அவர் பக்கம் சாய்ந்த MP-கள் யாராக இருக்கும் என கேள்விகள் எழுந்த நிலையில், தங்களது ஆதரவு பிரதமர் Tan Sri Muhyiddinனுக்கே என PASசும் GPSசும் கூறின.
இவ்வேளையில் எதிர்பாரா திருப்பமாக Anwarருக்கு சில அம்னோ MPக்களே ஆதரவு கொடுப்பதாக அக்கட்சித் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உறுதிப்படுத்தினார்.
அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்க முடியாது என்றும் அதற்கு மதிப்பளிப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில், இந்த நேரம் வரை தாமே நாட்டின் சட்டப்பூர்வ பிரதமர் என ஆகக் கடைசியாக Muhyiddin அறிவித்திருக்கின்றார்.
தமது தலைமையிலான Perikatan Nasional அரசாங்கமும் இன்னமும் வலுவுடன் இருப்பதாக அவர் சொன்னார்.
தமக்கு பெரும்பான்மை இருப்பதாக Anwar கூறினால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதனை அவர் நிரூபிக்க வேண்டும்.
அப்படிச் செய்யாத வரை அது வெறும் பேச்சாகவே கருதப்படும் என பிரதமர் சுட்டிக் காட்டினார்.
ஆக இந்த அரசியல் பரபரப்பு எழுந்த வேகத்தில் அடங்கிப் போகுமா அல்லது பிப்ரவரி மாதம் Sheraton நகர்வின் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைப் போன்று இன்னோர் அதிரடிக்கு நாட்டை இட்டுச் செல்லுமா பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் என அரசியல் ஆர்வாளர்கள் கூறுகின்றனர்.
Covid-19 பரவலை அடுத்து பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்சியுறவைப்பதற்கான முயற்சியை உந்தச் செய்யும் நோக்கில் அரசாங்கம் 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டிலான 'KITA PRIHATIN' எனும் கூடுதல் உதவித் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன் கீழ் Bantuan Prihatin Nasional எனும் தேசிய பரிவுமிக்க உதவித் திட்டம் இரண்டாம் சுற்றாக கொடுக்கப்படுகிறது.
அவ்வகையில் B40 தரப்பினர், அப்பிரிவைச் சேர்ந்த திருமணம் ஆகாதவர்கள், M40 தரப்பினர், அப்பிரிவைச் சேர்ந்த திருமணம் ஆகாதவர்களுக்கு 300 ரிங்கிட்டில் இருந்து ஆயிரம் ரிங்கிட் வரை வழங்கப்படவுள்ளது.
அதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முன் BPNனின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சம் பேருக்கு அத்தொகை நேரடியாக கொடுக்கப்படும்.
Covid-19 தொற்றுக்கு நாட்டில் மேலும் மூவர் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 147 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 143 உள்நாட்டில் பரவியவை.
அவ்வெண்ணிக்கையில் 134 புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Udin cluster உட்பட சபாவில் அடையாளம் காணப்பட்டவையாகும்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 63 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.
மேலும் இருவர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather