← Back to list
சைகை மொழி - இதர மொழிகளுக்கு நிகாரான ஒரு மொழி!
Sep 23, 2020
சைகை மொழி என்பது, உலகில் பேசபடும் இதர மொழிகளுக்கு நிகரான ஒரு மொழியே!
அம்மொழியை யார் வேண்டுமானாலும் தாரளமாக கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகின்றார், மலேசிய சைகை மொழி சங்கத்தின் தலைவர் Wan Zuraidah Abu.
காது கேளாதவர்கள், இந்த சமுதாயத்தில் தாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை உணர இந்த சைகை மொழி கற்றல், பொது மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் Zuraidah கூறினார்.
இந்த சைகை மொழிக்கான அவசியம் குறித்த தொடக்கப் பள்ளி முதலே வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக சைகை மொழி தினத்தை ஒட்டி அவர் இத்தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
நேர நீட்டிப்பு!
பூப்பந்து மற்றும் futsal மையங்கள், இனி அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க அனுமதி உண்டு!
விளையாட்டு தொடர்பான தொழில்துறையினர் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை கருத்தில் கொண்டு, அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
"mereka membuat aduan ramai yang datang bermain futsal ditempat mereka datang biasanya selapas waktu maghrib atau selepas waktu isyak, kalau selepas waktu isyar mungkin 9 baru start, 3 jam dah kena tutup sedangkan banyak pasukan yang menyertainya."
முன்னதாக, அவ்விளையாட்டு மையங்கள் நள்ளிரவு வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தன.
இதரச் செய்திகள்.....
- மாமன்னர், இருதய சிகிச்சைக் கழகம் IJN-னில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது; எனினும், அவரது உடல் நிலை குறித்து கவலைப்படும் படியாக எதுவுமில்லை என்றும் அரண்மனை கூறியது.
- நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்ட வேண்டாம் என, காவல் துறை மீண்டும் பொது மக்களை எச்சரித்திருக்கின்றது; அவ்வாறு செய்ய, சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், அதனை மீறுபவர்களுக்கு ஈராயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை அத்துறை மீண்டும் நினைவுறுத்தியது.
- KL Wangsa Maju-வில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரின் மீது அமர்ந்திருந்த பூனையைப் பிடித்து விட்டெறிந்த ஆடவரை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்; முன்னதாக, அக்கொடூரக் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி, பொது மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
- KL Besraya நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் நகைகளை ஏற்றியிருந்த வாகனத்தை வழிமறித்து, மூன்று மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், காவல் துறை இதுவரை 8 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றது; அந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில், இன்னும் பிடிப்படாமல் இருக்கும் முகமூடி கொள்ளையர்கள், 67 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் களவாடிச் சென்றுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather