Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சபாவில் மேலும் ஒரு புதிய cluster!

Sep 22, 2020


சபாவில் மேலும் ஒரு புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.

Sempornaவில் Bangau-bangau எனும் அந்த cluster கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

அங்கு ஐவருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில் Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 82 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 72 உள்நாட்டில் பரவியவை.

168 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

மரண எண்ணிக்கை 130 ஆகவே இருக்கிறது.

Covid-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் சபா சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி இல்லை.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob இன்று அதனைத் தெரிவித்தார்.

“Mereka yang COVID positif, dan dirawat di hospital tidak dibenarkan keluar mengundi kerana takut menyebarkan penyakit di luar”

தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள், மாநில சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும் வாக்களிக்க விரும்புவோர் முதலில் தத்தம் மாவட்டங்களில் உள்ள சுகாதார அலுவலகங்களில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

“ Mesti membuat permohonan kepada Pejabat Kesihatan Daerah, supaya dapat tentukan time untuk mereka dibawa keluar kerana untuk mereka yang mengundi akan diuruskan oleh Kementerian Kesihatan dan SPR”

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் நூறு பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது .

எஞ்சிய 36 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

KL, Bandar Tasik Selatanனில் கட்டுமானத் தளத்திற்கு அருகே ஓடிய காரின் மீது concrete சுவர் ஒன்று விழுந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ள ஒரு மாதம் பிடிக்கலாம்.

மலேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை JKKP அவ்வாறு தெரிவித்திருக்கிறது.

அச்சம்பவம் தொடர்பில் இதுவரை கட்டுமானப் பணியாளர்களுடமும் சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் மட்டுமே விசாரிக்கப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் காரின் மீது concrete சுவர் விழுந்ததில் அதில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர், ரவாங்கில் உள்ள Sungai Gong ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட கனரக இயந்திரப் பட்டறையின் ஐந்து உயர் அதிகாரிகளைத் தலா 4 லட்சம் ரிங்கிட் பிணை உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன் அவர்களைப் பிணை உத்தரவாதத்தில் விடுவிக்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

Sungai Gong ஆற்று நீர் மாசடைந்ததன் காரணமாக அண்மையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Wangsa Majuவில் தமது காரின் மேல் இருந்த பூனையை ஆடவர் ஒருவர் தரையில் பலமாகத் தூக்கியெறிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் இதுவரை புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என காவல் துறை கூறியிருக்கிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather