Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி - பாரபட்சம் இருக்கக்கூடாது!

Sep 22, 2020


COVID-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டதும், அதனை எவ்வித பாரபட்சமும் இன்றி, எல்லா நாடுகளும் பெற்றுக் கொள்வதை, ஐநா உறுதிச் செய்ய வேண்டும் என, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தியிருக்கின்றார்.

அக்கோறனி நச்சில் தொற்று இனம், மொழி என எந்த பாகுபாடும் காட்டாமல், உலக மனிதர்களுக்கு, உடல் நல ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதை Tan Sri Muhyiddin சுட்டிக் காட்டினார்.

ஐநா பொதுப் பேரவையின் 75ஆவது நிறைவாண்டை ஒட்டி, பிரதமர் உரையாற்றினார்; மலேசியப் பிரதமர் என்ற முறையில் ஐநா பொதுப் பேரவையில் முகிதின் உரையாற்றுவது இதுவே முதன் முறை.

மின்னியல் சாதனங்கள் வழங்குவது குறித்து பரிசீலனை!

B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கற்றல் - கற்பித்தல் PdP-க்கான மின்னியல் சாதனங்களை வழங்குவது குறித்து, கல்வி அமைச்சு பரிசீலித்து வருகின்றது.

COVID-19 சீற்றத்தை அடுத்து, கடந்த மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன் முறையாக அமுலுக்கு வந்த சமயம் தொடங்கி, தற்போது வரை,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மின்னியல் சாதனப் பயன்பாட்டுக்கான தேவை அதிகரித்திருப்பதே அதற்கு காரணம் என, கல்வி துணை அமைச்சர் Datuk Dr. Mah Hang Soon தெரிவித்தார்.

மின்னியல் சாதன வசதி கொண்டிருக்காத மாணவர்களுக்கு PdP தொடர்பான உபகரணங்கள், தபால் சேவை மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் துணை அமைச்சர் கூறினார்.

விதிமுறைகள் கடுமையாக்கப்படும் - DBKL!

தலைநகரில், பொது மக்களின் பாதுகாப்பு கருதி, கட்டுமானத் தளங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு, பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என DBKL தெரிவித்துள்ளது.

அண்மையில் Bandar Tasik Selatan-னில், கட்டுமானத் தளத்தில் இருந்து concrete சுவர் இடிந்து, சாலையில் ஓடும் கார் ஒன்றின் மீது விழுந்த சம்பவத்தை அடுத்து DBKL அதனை தெரிவித்தது.

Jalur Gemilang விவகாரம் - காவல் துறை விளக்கம்!

அண்மையில், Perak Parit Buntar அருகே காவல் நிலையம் ஒன்றில், Jalur Gemilang தேசியக் கொடி, தலைகீழாக பறந்த சம்பவம், வேண்டுமென்றே நிகழ்ந்தது அல்ல என மாவட்ட காவல் துறைத் தலைவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அக்கொடியை ஏற்றிய காவல் வீரர் விசாரிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இனியும் பகிர வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather