← Back to list
சபாவில் மேலும் ஒரு புதிய cluster!
Sep 21, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 57 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 51 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
சபாவில் மிக அதிகமாக 49 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மொத்த மரண எண்ணிக்கை 130 ஆகவே உள்ளது.
சபாவில் புதிய cluster சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Tongodட்டில் கண்டறியப்பட்டுள்ள Kuarters clusterரே அப்புதிய clusterராகும்.
Covid-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட 26 ஆயிரத்துக்கும் அதிகமான மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
94 நாடுகளில் இருந்து 528 விமானப் பயணங்கள் மூலம் அவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாக Wisma Putra தெரிவித்திருக்கிறது.
இவ்வேளையில், சில நாடுகளில் அனைத்துலகப் பயணங்களுக்கு விமான நிலையங்கள் இன்னும் மூடப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து 56 பேர் நாடு திரும்ப முடியாமல் இருப்பதாக அது கூறியது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 293 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 269 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டு 24 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
பினாங்கில், Covid-19 தொடர்பில் Ara எனும் புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தின் தென் மேற்கு மாவட்டத்தில் தற்போதைக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்த clusterரில் இரு சம்பவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி மாநில முதலமைச்சர் அவ்வாறு கூறினார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை, சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது ஆகியவற்றைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.
சபா சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கிட்டதட்ட 17 ஆயிரம் பேர் நாளை முன் கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர்.
வாக்களிப்பு நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
அது தேர்தல் ஆணையம் SPRரின் Facebook பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
Covid-19 பரவலைத் தடுக்க வாக்களுக்கும் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், Covid-19 சம்பவங்கள் அதிகரித்திருப்பது, சபா சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும் என SPR ஐயம் தெரிவித்திருக்கிறது.
வாக்களிக்க விரும்புவோரை SPR தடுக்க முடியாது.
எனினும் Covid-19 உறுதிப்படுத்தப்பட்டவர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களும் வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது என அது ஆலோசனை கூறியது.
சபா சட்ட மன்றத் தேர்தல் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
------------------
பிற செய்திகள்.....
பினாங்கு, Tanjung Bungahவில் விமானமொன்று கடலில் விழுந்ததைக் கண்டதாக மூன்று மீனவர்கள் கூறியிருப்பது தொடர்பில் காவல் துறை விசாரித்து வருகிறது.
அச்சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக அம்மூன்று மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.
-----
பேராவில் காவல் நிலையமொன்றில் Jalur Gemilang கொடி தலைகீழாகப் பறக்க விடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather