Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

SUKE சம்பவம்: கடும் நடவடிக்கை உண்டு!

Sep 21, 2020


கடந்த சனிக்கிழமை, Bandar Tasik Selatan அருகே, கட்டுமானத் தளத்திற்கு அருகே ஓடும் காரின் மீது concrete சுவர் ஒன்று விழுந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பணி அமைச்சு கூறியுள்ளது.

அச்சம்பவம் மீதான விசாரணையின் அடிப்படையில் அந்நடவடிக்கை அமையும் என அமைச்சு தெரிவித்தது.

பொது மக்களின் பாதுகாப்பு என வரும் போது, சமரசம் என்றப் பேச்சுக்கு இடமில்லை என்றும் அமைச்சு கூறியது.

அதே சமயம், கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு வழிகாட்டி நடைமுறைகள் எந்நேரமும் பின்பற்றப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

அச்சம்பவத்தில், கார் ஓட்டுநரான 25 வயது பெண் ஒருவர், கையில் காயமடைந்தார்; அவர், பொது மக்கள் உதவியுடன் அக்காரில் இருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

Cheras-சில் நிகழ்ந்தது விபத்து! காவல் துறை விளக்கம்!

நேற்றிரவு KL Cheras-சில் கார் மீது Concrete சுவர் எதுவும் விழவில்லை; மாறாக, அந்த காரின் பின் புறத்தை kren மோதி, விபத்து ஏற்பட்டதே உண்மை என  காவல் துறை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

எனினும், கார் ஓட்டுநருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Taman Len Seng-கில் கட்டுமானத் தளம் அருகே அக்காரின் மீது ஏதோ அடையாளம் தெரியாதப் பொருள் விழுந்து விட்டதாக கூறி, முன்னதாக அச்சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன. 

அமைச்சரவை விவாதிக்கும்!

சபாவில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அதன் தொடர்பில் நாளை அமைச்சரவைக் கூடி, விவாதிக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் கூறியுள்ளார்.

வரும் சனிக்கிழமை, சபா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து, அம்மாநில மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விவகாரங்கள் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாரவர்.

சபாவில் இதுவரை 4 cluster-கள் பதிவாகியுள்ளன; அதில் ஆக அதிகமாக 578 சம்பவங்கள், Benteng cluster-ரை உட்படுத்தியிருக்கின்றது.

பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மீதான கல்வி!

பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மீதான பாடத்தை கட்டாயமாக்குவதுப் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம் என, வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகம் NIOSH துணைத் தலைவர் செனட்டர் Datuk T Mohan பரிந்துரைத்துள்ளார்.

இந்த அடிப்படை பாதுகாப்பு குறித்த கல்வி ஆரம்பப் பள்ளியோடு நின்று விடமால், பல்கலைக்கழகம் வரை மாணவர்களின் சிந்தனை முதிர்ச்சிக்கு ஏற்ப விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, NIOSH சார்பில், பள்ளிகளில்  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த திட்டங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், Datuk T  Mohan குறிப்பிட்டார்.

தங்களது சொந்தப் பாதுகாப்பை உறுதிச் செய்ய மாணவர்கள் சில அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்; அதற்கான விழிப்புணர்வு இயக்கங்கள் NIOSH உதவியுடன் மேற்கொள்ளப்படலாம் என சமூக ஆர்வலர் Tan Sri Lee Lam Thye வலியுறுத்தியிருந்தது தொடர்பில் அவர் பேசினார்.

முன்னதாக, பினாங்கில், 4 பெண்கள் காரில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், Carbon Monoxide வாயு கசிவினால், சுயநினைவை இழந்து, அவர்களில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து Tan Sri Lee Lam Thye கருத்துரைத்தார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather