← Back to list
600க்கும் மேற்பட்டமருத்துவப் பணியாளர்களுக்கு Covid-19!
Sep 18, 2020
பிப்ரவரி மாதத்தில் இருந்து கடந்த புதன்கிழமை வரை, நாட்டில் 600க்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு Covid-19 கிருமித் தொற்று பீடித்திருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க மருத்துவமனைப் பணியாளர்கள்.
எஞ்சியவர்கள் தனியார் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளத் தவறிய தோட்டத்தொழில், மூலப்பொருள் அமைச்சர் Datuk Khairuddin Aman Razali, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்காகத் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தமது facebookக்கில் விளக்கியிருக்கிறார்.
தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறியது தொடர்பில் அவருக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அடையாள அட்டை, பிறப்பு, திருமணம் ஆகியவை தொடர்பான ஆவணங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர், இணையம் வாயிலாக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுவதாக தேசிய பதிவுத்துறை தெரிவித்திருக்கிறது.
Covid-19 பரவல் காணப்படும் இக்காலக் கட்டத்தில், அது சிறந்த நடவடிக்கையாக இருப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும் என JPN கூறியது.
விண்ணப்பம் செய்தவர்கள் தயார்படுத்தப்பட்ட பத்திரங்களை எடுக்க மட்டும் JPN சென்றால் போதுமானது.
பினாங்கு, Butterworthத்தில் எண்ணெய் நிலையமொன்றின் கார் நிறுத்துமிடத்தில் காருக்குள்ளேயே அயர்ந்து உறங்கி விட்டதால் Carbon Monoxide வாயுவை சுவாசித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு தோழிகளில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அச்சம்பவத்தில் பலியான மூன்றாவது நபர் அவராவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது.
குழுவாக சைக்கிளோட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டாம் என ஆலோசனை கூறிய PDRM, மீறுவோருக்கு ஆயிரம் ரிங்கிட் வரை அபராதமும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என எச்சரித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather