← Back to list
புதிய 21 சம்பவங்கள்!
Sep 17, 2020
நாட்டில் புதிதாக மேலும் ஒரு Cluster சம்பவம் பதிவாகியுள்ளது!
அது சபாவில் பதிவான Selamat Cluster ஆகும்.
அதோடு இன்று புதிதாக 21 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றுள் ஆக அதிகமாக சபாவில் தான் எட்டு உள்நாட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கெடா ஏழு உள்நாட்டுச் சம்பவங்களைக் கொண்டிருக்கின்றது.
_______
தனது ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்று பீடித்திருப்பதை பொது பணி துறை உறுதிபடுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபருக்கு அத்தொற்று நேற்று உறுதிபடுத்தப்பட்டதாகவும், அவர் தற்போது Sungai Buloh மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.
அத்துறையின் இதர ஊழியர்களுக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சுய தனிமைபடுத்துதலை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர்.
______
சந்தைகளில் விற்கப்படும் சுவாசக் கவசங்களின் தரத்தை கண்காணிக்கும் முறைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
அவை உண்மையிலேயே Covid-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவுமா என்பதை உறுதிச் செய்யவே இவ்வாறு செய்யப்படுவதாக உள்நாட்டு, வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்தது.
நாட்டில் சில பகுதிகளில் விற்கப்படும் சுவாசக் கவசங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அமைச்சு அவ்வாறு கூறியது.
_________
பினாங்கு செல்லும் வழியில் PLUS நெடுஞ்சாலையில் காரை எண்ணெய் நிலையத்தில் நிருத்திவிட்டு, குளிரூட்டியை திறந்து விட்ட படி உறங்கிக் கொண்டிருந்த ஒருவர், காரின் Carbon Monoxide வாயுவை சுவாசித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதே காரில் இருந்த எஞ்சிய இருவரின் நிலை மருத்துவமனியில் கவலைக்கிடமாக இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடக்கக் கட்ட விசாரணையின் இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
__________
சபா சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருப்போர் தங்களது வாக்குச் சீட்டுகளைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நினைவுறுத்தியிருக்கின்றது.
சபாவில் வருகின்ற 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather