← Back to list
11% மட்டுமே பாதுகாப்பு வார்ப்பட்டையை அணிகின்றனர்
Sep 17, 2020
நாட்டில் வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே பாதுகாப்பு வார்ப்பட்டையை அணிகின்றனர்.
மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகம் MIROS மேற்கொண்ட அண்மைய ஆய்வில் அது கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனி, பிரிட்டன் போன்ற பிற நாடுகளைக் காட்டிலும் அவ்வெண்ணிக்கை மிக மிகக் குறைவு என அது BHச்சிடம் தெரிவித்தது.
அந்நாடுகளில் வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரின் கிட்டதட்ட 80தில் இருந்து 90 விழுக்காட்டினர் பாதுகாப்பு வார்ப்பட்டைகளை அணிவது தெரிய வந்துள்ளது.
சுவாசக் கவசங்கள் முன்பை விட தற்போது மலிவாக விற்கப்படுவது தெரிந்ததே!
என்றாலும், சில இடங்களில் மிகக் குறைவாக 50 சென்னுக்குக் கூட அவை விற்கப்பட்டு வருவதை உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அப்படி மிக மிக மலிவாக விற்கப்படும் சுவாசக் கவசங்கள் உண்மையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பின்பற்றியிருக்கவில்லை.
எனவே ஒரு ரிங்கிட் என்ற உச்ச வரம்பு விலைக்கும் கீழ் விற்கப்படும் சுவாசக் கவசங்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது என அமைச்சு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.
இவ்வேளையில் பயனீட்டாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட சுவாசக் கசங்கள் மட்டுமே விற்கப்படுவதை உறுதிச் செய்ய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என அது கோடி காட்டியது.
Covid-19 தொடர்பில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேற்று புதிதாக 62 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இதுவரை பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து 31 ஆக உள்ளது.
நேற்றைய 62 சம்பவங்களில் 61 உள்நாட்டில் பரவியவையாகும்.
சபாவில் மிக அதிகமாக 59 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை KLலில் இருந்து Kota Kinabalu சென்ற Malindo Air விமானத்தில் இருந்த சிலர் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
30தில் இருந்து 33 ஆம் இருக்கை வரை அமர்ந்திருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வர வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றம் கூறியிருக்கிறது.
திறந்த வெளி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான SOPயை மறு ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டால் அவ்வாறு செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது.
ஆயினும் இதுவரை அத்தகைய விண்ணப்பங்கள் ஏதும் இல்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் சொன்னார்.
அவற்றுக்கான SOP-கள் சற்று கடுமையாக இருப்பதால் பல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க முனைவதாக கூறப்படுவது தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார்.
சைக்கிள்களைப் பதிவு செய்து அவற்றுக்கு லைசன்ஸ் பட்டை வழங்கும் பரிந்துரை தொடர்பில் முடிவெடுக்கும் முன் ஆழமான ஆய்வு அவசியம் என போக்குவரத்து அமைச்சு கூறியிருக்கிறது.
தற்போதைக்கு அத்தகைய திட்டமேதும் இல்லை.
எனினும் சைக்கிளோட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாப்பு இயக்கங்களும் திட்டங்களும் மட்டுமே தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்தது.
தத்தம் வீடுகளுக்கு முன் வியாபாரம் செய்பவர்கள் தற்காலிக லைசன்ஸ் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஊக்குவிக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் வருமானம் ஈட்ட அதிகமானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்கு அந்த உரிமத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அது விளக்கியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather