← Back to list
பதற்றம் வேண்டாம்! கெடா மக்களுக்கு மாநில சுல்தான் அறிவுரை!
Sep 11, 2020
கெடாவில் 2ஆம் கட்டமாக ஏற்பட்டுள்ள COVID-19 பரவல் குறித்து, பதற்றமடைய வேண்டாம் என மாநில சுல்தான் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
காரணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேச் செல்ல வேண்டாம் என்றும், அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கெடா, Kota Setarரில் நேற்று நள்ளிரவு தொடங்கி 25 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள வேளை, Amanjayaவில் கடுமையாக்கப்பட்டிருந்த MCO, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பிரச்னைக்கு தீர்வுக் காணப்படும்!
தலைநகரில் தொடர்கதையாகி வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்கான காரணம் ஆராயப்பட்டு, நீண்ட கால தீர்வு எடுக்கப்படும் என, கூட்டரசுப் பிரதேச அமைச்சு கூறியுள்ளது.
அதன் தொடர்பில், நீர்பாசன, வடிகால் துறை மற்றும் DBKL-லிடம் இருந்து, நடப்பில் உள்ள வெள்ளத் தடுப்பு முறைகள் குறித்த அறிக்கைப் பெறப்படும் என, அமைச்சர் Tan Sri Annuar Musa தெரிவித்தார்.
நேற்று தலைநகரில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தை அடுத்து அமைச்சர் அவ்வாறு கூறினார்; அத்திடீர் வெள்ளத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றாரவர்.
நேற்று பகல் ஒன்றரை மணியளவில் பெய்யத் தொடங்கிய மழைக் காரணமாக, KL சுற்றுப் பகுதியில் ஏறக்குறைய ஐந்து இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
Lebuh Ampang, Kampung Baru, Setapak உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டன.
வெள்ள நீர் ஒன்று முதல் மூன்று மீட்டர் வரை உயர்ந்ததை அடுத்து, போக்குவரத்து நிலைக்குத்தியது.
வெள்ளத்தில் பயணத்தை தொடர முடியாமல் சிக்கிக் கொண்ட சுமார் 15 பேரை தீயணைப்புத் துறை மீட்டது.
வெள்ளத்தை அடுத்து, SMART சுரங்கப் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், மழைக் காரணமாக நேற்றிரவு பினாங்கிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது; Nibong Tebal-லில் ஏறக்குறைய 50 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசு சார்பில் மன்னிப்புக் கேட்டார் KJ!
சபா உட்புறப் பகுதியில், தேர்வெழுதுவதற்காக இணைய வசதி தேடி, மரம் மீது ஏறிய மாணவியை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் Khairiy Jamaluddin நேரில் சென்று சந்தித்து, அரசாங்கம் சார்பில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அம்மாணவி பரீட்சை எதுவும் எழுதவில்லை; மாறாக, தனது YouTube பக்கத்தைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற சுயநலத்திற்காகவே அவ்வாறு மரம் மீது ஏறினார் என இரு துணை அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் கூறியது, மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அவ்விவகாரத்தில் அடிப்படை பிரச்னை என்ன என்பது தெரியாமல் அவ்விருவரும் பேசி வருகிறார்கள் என இணையவாசிகளும் தங்கள் பங்கிற்கு கண்டனம் தெரிவிக்க, விஷயம் அமைச்சரவை வரை சென்று விட்டது.
இதையடுத்து, அவ்விரு துணை அமைச்சர்களின் செயலைச் சாடிய அமைச்சரவை, அடிப்படைப் பிரச்னையான உட்புறப் பகுதிகளில் இணைய வசதிக் குறைப்பாட்டை சரி செய்யும் தனது கடப்பாட்டை உறூதிச் செய்தது; இந்நிலையில் தான் அரசு சார்பில் Khairy, அம்மாணவியையும், அவரது குடும்பத்தையும் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக, அம்மாணவி குறித்து தாம் வெளியிட்ட தவறான கூற்றுக்கு, துணை அமைச்சர் Datuk Zahidi Zainul Abidin மேலவையில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
மற்றோர் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது!
Lebanon தலைநகர் Beirut-டில், மேலுமோர் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது!
அங்கு 200 பேரின் உயிரைப் பலிகொண்ட வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய ஒரு மாதமே ஆகும் நிலையில், எண்ணெய் மற்றும் டயர்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கொன்றில் தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்றாலும் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக Lebanon அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather