← Back to list
Kota Setarரில் MCO கடுமையாக்கப்படுகிறது!
Sep 10, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 45 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 44 உள்நாட்டில் பரவியவை.
மிக அதிகமான 40 சம்பவங்கள் சபா, Benteng clusterரில் பதிவாகியுள்ளன.
கெடா, Sungai மற்றும் Telaga clusterகளிலும் புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 24 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண எண்ணிக்கை 128 ஆகவே இருக்கிறது.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து கெடா, Kota Setarரில் நிர்வாக முறையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடுமையாக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
முக்கிய வணிகத் தளங்கள் மட்டுமே செயல்பட அனுமதியுண்டு.
இதனிடையே சபா, Tawau சிறைச் சாலையிலும் இன்று நள்ளிரவு தொடங்கி 25 ஆம் தேதி வரை நிர்வாக முறையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், கெடா, Amanjayaவில் கடுமையாக்கப்பட்டிருந்த MCO, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
அங்குள்ள மக்களுக்கு Covid-19 தொற்றுக்கான பரிசோதனை இன்னும் முடிவடையாததே அதற்குக் காரணம்.
சபா சட்ட மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற இன்னும் இரு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகின்றன.
அவ்வகையில் தேசிய முன்னணி 31 தொகுதிகளிலும் Perikatan Nasional, 29 தொகுதிகளிலும் முதலமைச்சர் Datuk Seri Mohd Shafie Apdal தலைமையிலான Warisan கட்சி 46 தொகுதிகளிலும், UPKO 12 இடங்களிலும் DAP 7 தொகுதிகளிலும் AMANAH ஒரு தொகுதியிலும் களமிறங்குகின்றன.
DAP-யும் AMANAH-வும் தத்தம் கட்சி சின்னங்களைப் பயன்படுத்தாமல் இம்முறை WARISAN கட்சி சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
Parti Cinta Sabah, அனைத்து 73 தொகுதிகளும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.
இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் சபா சட்ட மன்றத் தேர்தலில் 73 தொகுதிகளுக்குப் போட்டியிடப்படுகிறது.
ரவாங், Sungai Gong ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிற்சாலையொன்றின் நான்கு நிர்வாகிகளின் தடுப்புக் காவல் மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்நால்வரும் சகோதரர்கள் ஆவர்.
Sungai Gong ஆற்று நீர் தூய்மைக்கேடு அடைந்ததால், கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் ஆயிரத்து 300 இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் Vijay தொலைக்காட்சிப் புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
வடிவேல் பாலாஜி, சில திரைப்படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather