Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிதாக 100 சம்பவங்கள்!

Sep 08, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக நூறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்ததில் இருந்து பதிவான மிக உயரிய எண்ணிக்கை அதுவாகும்.

அச்சம்பவங்களில் 85 உள்நாட்டில் பரவியவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

இதனிடையே, மேலும் 12 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த மரண எண்ணிக்கை 128 ஆகவே உள்ளது.

தேர்தல் நடத்தப்படும்!

சபா சட்ட மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும்.

Tawauவிலும் Lahad Datuவிலும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவது அதில் பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Lahad Datuவில் சிறைச்சாலையொன்றை உட்படுத்திய clusterரில்  நேற்று 50 சம்பவங்கள் பதிவாகிய வேளையில், SPR அவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

எனினும் அந்த clusterரில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாகவும் வாக்களிப்புக்கு அது ஒரு மருட்டலாக இருக்காது என்றும் SPR, Malay Mailலிடம் கூறியது.

எனினும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOP பின்பற்றப்படுவது உறுதிச் செய்யப்படும் என அது உத்தரவாதம் அளித்தது.

பயணத் தடையா? அத்தகவலில் உண்மையில்லை!

சபா, Tawauவிலும் Lahad Datuவிலும் பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அம்மாநில காவல் துறை மறுத்திருக்கிறது.

அவ்விரு மாவட்டங்களிலும் Covid-19 சம்பவங்கள் அதிகமாக இருப்பதால் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் தகவல் உண்மையில்லை எனவும் 
அதன் தொடர்பில் தங்களுக்கு உத்தரவு ஏதும் வரவில்லை எனவும் அது தெளிவுபடுத்தியது.

Tawauவிலும் Lahad Datuவிலும் இருந்து வெளியேறவும் அங்கு செல்லவும் இயலாது என்றும் அங்குள்ள வர்த்தகத் தளங்கள் செயல்பட அனுமதியில்லை என்றும் அத்தகவலில் கூறப்பட்டிருந்தது. 

SPRM விசாரணை!


ரவாங், Sungai Gong ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடக்கியிருக்கிறது. 

அமலாக்கத் தரப்பினரை உட்படுத்திய கையூட்டு அம்சம் ஏதும் அதில் உள்ளதா என்பதை SPRM ஆராய்ந்து வருகிறது.

அதன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்களை தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது.

Sungai Gong ஆற்று நீர் தூய்மைக்கேடு அடைந்ததால் கடந்த வாரம் நான்கு சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய ஆயிரத்து 300 இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
 

இருவர் நியமனம்!

BERSATUவில் புதிதாக இணைந்த அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் Datuk Seri Azmin Aliயும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் Zuraida Kamaruddinனும் அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather