← Back to list
இருவர் 6 நாட்களுக்குத் தடுத்து வைப்பு!
Sep 07, 2020
Photo : The Star
ரவாங், Sungai Gong ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் தொழிற்சாலையொன்றைச் சேர்ந்த இரு பணியாளர்கள் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
கடந்த வாரம் அத்தொழிற்சாலையின் நான்கு மூத்த அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவ்வேளையில் சம்பந்தப்பட்ட அத்தொழிற்சாலை கடந்த ஆறு ஆண்டுகளாக லைசன்ஸ் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.
கடந்த வாரம், Sungai Gong ஆற்று நீர் மாசடைந்ததால், 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு, அதனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆயிரத்து 200க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
சிலாங்கூர் menteri besar Datuk Seri Amirudin Shari அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்களது அதிகாரத்துவ இல்லத்தில் நீர் கொள்கல லாரி ஒன்று நிற்கும் புகைப்படத்தைத் தமது மனைவி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதை அடுத்து அவர் அவ்வாறு செய்துள்ளார்.
உண்மையில் நீர் உதவி வழங்கிய நிறுவனத்திற்கு நன்றி கூறும் வகையிலேயே தமது மனைவி அப்புகைப்படத்தைப் பதிவேற்றியதாக MB தெளிவுபடுத்தினார்.
கெடாவில் Covid-19 தொடர்பில் புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது Sungai cluster ஆகும்.
இதனிடையே நாட்டில் புதிதாக 62 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 50 சம்பவங்கள் சபாவில் Benteng clusterரில் பதிவானவை.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்ததில் இருந்து பதிவான மிக உயரிய எண்ணிக்கை அதுவாகும்.
மேலும் 9 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
மரண எண்ணிக்கை 128 ஆகவே நீடிக்கிறது.
இன்று முதல் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளின் பட்டியலை குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்டவை அப்பட்டியலில் உள்ளன.
ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான Covid-19 சம்பவங்களைக் கொண்டுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு இன்று முதல் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 873 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மிக அதிகமாக 797 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.
71 பேர் தடுத்து வைக்கப்பட்ட வேளை, ஐவர் பிணை உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகிலேயே Covid-19 சம்பவங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, Brazilலைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமான சம்பவங்களும் 71 ஆயிரத்துக்கும் கூடுதலான மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Johns Hopkins Universityயின் தரவு விவரம் கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather