← Back to list
நீர் விநியோகத் தடை!
Sep 04, 2020
Photo : The Star
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏழு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை குறைந்தது இன்னும் நான்கு நாட்கள் வரை நீடிக்கலாம்.
சிலாங்கூர் ஆற்றில் இன்னமும் தூய்மைக்கேடு காணப்படுவதாகவும் அதனால் நான்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் இன்னும் இயங்கவில்லை எனவும் Air Selangor நிறுவனம் தெரிவித்தது.
நீர் விநியோகத் தடையால் KLலிலும் சிலாங்கூரிலும் ஏழு மாவட்டங்களில் ஏறக்குறைய ஆயிரத்து 300 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஈரிலக்க எண்ணாகவே உள்ளது.
புதிதாக 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் நான்கு உள்நாட்டில் பரவியவை.
மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த மரண எண்ணிக்கை 128 ஆகவே இருக்கிறது.
Semenyih 2டில் குடிநுழைவு தடுப்பு மையத்தில் புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 47 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை வழி தெரிவித்தது.
வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யத் தவறியது, வர்த்தகத் தளங்கள் கூடுதல் நேரத்திற்குச் செயல்பட்டது, சுவாசக் கவசம் அணியாதது ஆகியவற்றுக்காக பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர்.
நாளை முதல் RON95 பெட்ரோல் ஒரு சென் சரிந்து லிட்டரிக்கு 1 ரிங்கிட் 71 சென்னுக்கு விற்கப்படும்.
RON97 பெட்ரோலும் ஒரு சென் இறங்கி லிட்டருக்கு 2 ரிங்கிட் ஒரு சென்னாகிறது.
டீசல் விலையில் மாற்றமில்லை.
அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 78 சென்னாக நீடிக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather