← Back to list
கிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் விநியோகத் தடை!
Sep 04, 2020
கிள்ளான் பள்ளத்தாக்கில், ஆயிரத்து 200க்கும் அதிகமான இடங்களில் நேற்று காலை முதல் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, Sungai Gong-கில் உள்ள தொழிற்சாலை காரணம் என நம்பப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதனை மூட நேற்று மதியமே உத்தரவிடப்பட்டு விட்டதாக Air Selangor நிர்வாக வாரியம் LUAS தெரிவித்தது.
தொழிற்சாலை மூடப்பட்டுள்ள போதிலும், சிலாங்கூர் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள மாசு இன்னும் குறையவில்லை;
அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகக் கடைசி நிலவரப்படி, தண்ணீரின் மாதிரியில் துர்நாற்றத்தின் அளவு மூன்றாக இருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக Air Selangor தெரிவித்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்ப சற்று நேரம் ஆகலாம் என்றும் அந்நிறுவனம் கூறியது.
இந்த நீர் மாசுபாடு காரணமாக 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஏறக்குறைய 10 மணி நேரங்களாக செயல்படாமல் இருக்கின்றன.
KL, Petaling, Klang, Shah Alam, Kuala Selangor, Hulu Selangor, Gombak, Kuala Langat ஆகியப் பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Bukit Aman விளக்கம்!
முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை M இந்திரா காந்தியையும் அவரது மகள் பிரசன்னா டிக்சாவையும் எப்போது சேர்த்து வைக்க முடியும் என்பதைஉறுதியாக கூற இயலாது என காவல் துறை தெரிவித்தித்திருக்கிறது.
தனது முன்னாள் கணவரிடம் இருக்கும் மகளை இவ்வாண்டு தீபாவளிக்குள் சந்தித்து விட முடியும் என இந்திரா காந்தி நம்பிக்கைத் தெரிவித்திருப்பது குறித்து கருத்துரைக்கையில் Bukit Aman அவ்வாறு கூறியது.
என்றாலும், காவல் துறை தரப்பில் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுக் காணும் கடப்பாட்டில் மாற்றமில்லை என Bukit Aman குற்றப் புலானாய்வுத் துறை தலைவர்
தெரிவித்தார்.
நேற்று இந்திரா காந்தியும், Bukit Aman காவல் துறையும் இவ்விவகாரம் குறித்து சந்திப்பை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்புக் கேட்ட துணை அமைச்சர்!
கடந்த ஜூன் மாதம், சபாவைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தேர்வெழுதுவதற்காக இணைய வசதி தேடி, காடொன்றில் மரம் ஒன்றின் மீது ஏறி, ஏறக்குறைய 24 மணி நேரத்தை அங்கேயே செலவிட்ட சம்பவம் குறித்து தாம் வெளியிட்ட தவறான கருத்துக்காக, தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அம்மாணவி தனது YouTube-பை பிரபலப்படுத்த வேண்டும் என்ற சுயநலத்திற்காகவே, அம்முயற்சிகளை மேற்கொண்டதாக துணை அமைச்சர் Datuk Zahidi Zainul Abidin நேற்று மேலவையில் கூறியிருந்தார்.
எனினும், தாம் கூறிய அத்தகவல் தவறு என்றும், அடுத்த வாரம் மேலவைக் கூடும் போது, அவற்றை தாம் மீட்டுக் கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 விழுக்காடு கழிவு நீட்டிக்கப்படுகிறது!
JPJ-வின் சாலைப் போக்குரத்துக் குற்றப் பதிவுகளுக்கான 70 விழுக்காடு கழிவுச் சலுகை, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுகின்றது.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இணையம் வாயிலாக அந்த அபராதங்களை செலுத்தி விடுமாறு, போக்குவரத்து அமைச்சு பொது மக்களை வலியுறுத்தியிருக்கிறது.
எனினும், காவல் துறை வெளியிட்ட குற்றப்பதிவுகளுக்கு இக்கழிவுச் சலுகைப் பொருந்தாது என அமைச்சு தெரிவித்தது.
கவனமாக வாகனமோட்டுங்கள்!
ஜொகூர் Jalan Kota Tinggi - Mersing பாதையில் பயணிக்கும் வாகனமோட்டிகள், கூடுதல் கவனத்துடன் பயணிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
அண்மையில், அச்சாலைக் கடக்க முயன்ற ஆண் யானைக் குட்டி ஒன்று கார் மோதி இறந்த சம்பவத்தை அடுத்து, மாநில வனவிலங்குத் துறை அதனை தெரிவித்தது.
காட்டினூடே அச்சாலை இருப்பதால், யானை, தும்பிப்பன்றி (tapir) போன்ற வனவிலங்குகள் அடிக்கடி கடந்துச் செல்வது வழக்கம் தான் என அத்துறை கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather