← Back to list
'Abah' தலைமைத்துவம் மீது 70 விழுக்காட்டினர் திருப்தி!
Sep 03, 2020
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னின் தலைமைத்துவத்தின் மீது கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் திருப்தி அடைந்திருப்பது, Merdeka Centre ஆய்வில் தெரிய வருகிறது!
COVID-19 பெருந்தொற்றை முகிதின் அரசு கையாண்ட- கையாண்டு வரும் விதத்தை மக்கள் கொண்டுள்ள திருப்தியை அது வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இருந்த போதிலும், கடந்த மார்ச் மாதம் Muhyiddin பிரதமராக பதவியேற்றப் போது அவருக்கு இருந்த 74 விழுக்காடு செல்வாக்கு, தற்போது 70 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ளது.
பெருந்தொற்றில் இருந்து விடுப்பட்ட ஜொகூர் & பினாங்கு!
ஜொகூரும், பினாங்கும் COVID-19 பெருந்தொற்றில் இருந்து தாற்போதைக்கு விடுப்பட்டுள்ளன!
Segamat, Barat Daya மற்றும் Timur Laut ஆகிய மாவட்டங்களில் COVID-19 சம்பவங்களோ, cluster-களோ எதுவும் இல்லை;
எனவே, அவை பச்சை மண்டலங்கள் பட்டியலுக்கு திரும்பியிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இருந்த போதிலும், பொது மக்கள் மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சு, புதிய வழமைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறியது.
நேற்று வரை, ஜொகூர், பினாங்கு தவிர்த்து, COVID-19 சம்பவங்கள் அறவே இல்லாத மாநிலங்களாக Kelantan, Perak, Negeri Sembilan ஆகியவை திகழ்கின்றன.
ஆக அதிகமாக 27 சம்பவங்களை கெடா கொண்டிருக்கிறது.
இவ்வேளையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள கெடா Aman Jaya-வில், இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வேளை, 182 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இன்னும் ஏறக்குறைய 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
மத்திய அமைச்சர் SOP மீறிய விவகாரம்: விசாரணை அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும்!
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறிய மத்திய அமைச்சர் Datuk Mohd Khairuddin Aman Razali மீதான விசாரணை அறிக்கை, விரைவில் தேசிய சட்டத் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
Datuk Mohd Khairuddin-னை உட்படுத்திய விசாரணைகள் இன்னும் நீடிப்பதாக Bukit Aman கூறியது.
முன்னதாக, விதிமுறை மீறிய அந்த அமைச்சருக்கு எதிராக பொது மக்கள் கண்டனக் குரல் எழுப்பியிருந்தனர்; எனினும், அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
118 செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா!
ஏற்கனவே Tik Tok செயலிக்கு தடை விதித்த இந்தியா, தற்போது PUBG உட்பட சீனாவின் 118 கைப்பேசி செயலிகளை முடக்கியிருக்கின்றது.
அச்செயலிகளில் பெரும்பாலானவை, பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதோடு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather